For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைரியமா இரு குவாடன்.. நாங்க இருக்கோம்.. தூக்கு கயிறு கேட்ட சிறுவனுக்கு குவியும் ஆதரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    9 Years Old kid Bullied by school Students

    கான்பெர்ரா: தனது முகத் தோற்றத்தால் தினமும் கேலி கிண்டலுக்காளான சிறுவன் தனது தாயிடம் தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள தூக்குக் கயிறு தரும்படி கேட்டு அழும் சிறுவனுக்கும் அவனது தாய்க்கும் நடிகர்கள் ஹக் ஜேக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன் உள்ளிட்டோர் ஆதரவு கரம் நீட்டி ஆறுதல் கூறி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்தவர் யர்ராகா பேல்ஸ். இவரது மகன் குவாடன். மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவன் உடல் வளர்ச்சிக் குன்றி காணப்படுகிறான். இதனால் அவனை சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் தனது தாயிடம் தூக்குக் கயிறு கேட்டு அழும் வீடியோவை யர்ராகா பேஸ்புக்கில் பதிவு செய்தார்.

    வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அதை பார்த்தனர். அதோடு பார்ப்போரின் நெஞ்சை உருகவைத்தது. பின்னர் தாய்க்கும் சிறுவனுக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து பதிவிட்டனர்.

    "ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..!

    குரல்

    குரல்

    அது போதாதற்கு ஹக் ஜேக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் குவாடனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
    ரஃபி போட்டியின்போது குவாடனை விளையாட்டு மைதானத்திற்கு வரவழைத்து கௌரவப்படுத்த வீரர்கள் விரும்புவதாக தெரிவித்தனர். உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்ள மக்கள் குவாடனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    சொல்லி கொடுப்பதில்லை

    சொல்லி கொடுப்பதில்லை

    பேஸ்புக்கில் அவரது தாய் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவு செய்த வீடியோவுக்கு 20 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது போல் குழந்தைகளை உருவதோற்றத்தை வைத்து கிண்டல் செய்யக் கூடாது என்பதை கல்வியாளர்களும் பெற்றோர்களும் ஏன் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை என அவரது தாய் கேட்டார்.

    எரிக் டிரம்ப்

    இந்த வீடியோவை பார்த்த ஜெஃப்ரி டீன் மோர்கன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் உன்னை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன். அதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அது போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் எரிக் டிரம்பும் குவாடனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    கருணை

    கருணை

    அது போல் ஹக் ஜேக்மேன் கூறுகையில் நீ எந்த அளவுக்கு வலிமையானவன் என்பது உனக்கு நன்றாக தெரியும். உனது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் கவலை இல்லை. நம் முன்னால் நிற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருவதை நீ நினைவில் வைத்துக் கொள். எனவே கோபம் வேண்டாம், கருணை உள்ளம் கொண்டவனாக இரு என தெரிவித்துள்ளார்.

    குவாடனின் தாய்க்கு ஆறுதல்

    குவாடனின் தாய்க்கு ஆறுதல்

    அது போல் துவார்ஃபிசம் எனப்படும் வளர்ச்சிக் குன்றிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிராட் வில்லியம்ஸ் தனது வீடியோவில் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் குவாடனை கவுரவிக்க GoFundMe என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அந்த சிறுவனை டிஸ்னிலேண்டிற்கு அனுப்பவுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் டாலர்கள் மட்டுமே வசூல் செய்ய வில்லியம்ஸ் முடிவு செய்தார். ஆனால் அவருக்கு 2.50 லட்ச டாலர்கள் குவிந்துள்ளன. குவாடனின் தாய்க்கு போன் செய்தும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Hugh Jackman, Jeffrey Deam Morgan and some of the celebrities supports Quaden and his mother.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X