For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேரியா கொசுக்களை ஈர்க்கும் செயற்கை மனித வாசனை.. ஆப்பிரிக்காவில் ஆய்வு

Google Oneindia Tamil News

நைரோபி: செயற்கையான மனித வாசனை மூலம் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை ஈர்த்துப் பிடிப்பது குறித்த ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். செயற்கையாக மனித வாசனையை வெளியிடும் சாதனம் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் மலேரியாவை ஏற்படுத்தும் 70 சதவீத கொசுக்களை பிடிக்க அந்த சாதனம் உதவியதாம்.

மலேரியாவை ஒழிப்பதற்கு கொசுக்கள் குறித்து கென்யாவில் ஆராய்சி மேற்கொள்ளப்பட்டது. நெதர்லாந்து பல்கலைக்கழகமான வேஜினின்ஜென் மூலமாக 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கொசுக்களை ஈர்க்கும் வகையில் செயற்கையான மனித வாசனையை வெளியிடும் சாதனத்தைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மலேரியாவை ஏற்படுத்தும் 70 சதவீதம் கொசுக்களை பிடிக்க அந்த சாதனம் உதவியதாம்.

Human scent helped to catch mosquito

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்றவை ஒட்டுண்ணிகளால் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது என்பதால், இந்த சாதனத்தை பயன்படுத்தி டெங்கு, ஜிகா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மருந்துகளை பயன்படுத்துவதால் கொசுக்கள் அதற்கு ஏற்றவாறு எதிர்ப்பு சக்தியை பெறுகிறதாம். இந்த சாதனத்தை பயன்படுத்தும் பட்சத்தில், பூச்சிக் கொல்லிகளை கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த தேவையில்லை என்று அந்த ஆராய்ச்சியில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேரியாவை பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் தடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என ஆராய்ச்சி மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழக மாணவர் தெரிவித்தார். இதற்காக அவர் கென்யாவில் உள்ள பூச்சிகள் குறித்த ஆராய்சி மையம், சுவிஸ் நாட்டின் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.

ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் மலேரியாவால் ஒரு குழந்தை உயிரிழந்து வருகிறது. இதற்காக வருடத்திற்கு 100 கோடி டாலர் செலவிடப்படுகிறதாம். கொசுக்கள் மூலமாக பரவும் இந்த மலேரியாவை ஒழிக்க முடியாத நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 438,000 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பகுதியில் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மலேரியால் ஏற்படும் 90 சதவீத உயிரிழப்புகளை 20 சதவீதமாக குறைக்க உலக சுகாதார அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

English summary
A three-year study in Kenya found the special traps baited with synthetic smell helped to catch 70% of the local malaria mosquito population, and led to a 30 percent drop in cases in households using the devices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X