For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் தொழிலுக்காக குழந்தைகளைக் கடத்தும் கும்பல்..... நிலநடுக்க நேபாளத்தில் அடுத்த அவலம்!!!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நிலநடுக்கம் உருக்குலைத்து ஆயிரக்கணக்கான மக்கள் பலியான நேபாளத்தில் அடிமைத் தொழிலுக்கும், பாலியல் தொழிலுக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இமாலயத்தின் ரக்சால் எல்லைப் பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதையடுத்து, குழந்தைகள் கடத்தலைத் தடுக்க இந்திய உளவுத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாக சாஸ்த்ர சீமா பால் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த டைரக்டர் ஜெனரல் பி.டி.ஷர்மா தெரிவித்துள்ளார்.

Human trafficking for child labour and prostitution in Nepal?

நிலநடுக்கம் புரட்டிப்போட்ட கிராமங்களில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டார்களா என்பது பற்றி தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒரு வேளை உணவுக்குக் கூட அல்லல்படும் மக்கள் தங்கள் குழந்தைகளை விற்கும் அவலமும் நேபாளத்தில் அரங்கேறி வருகிறது.

ஆண்டுதோறும் குழந்தைகள், பெண்கள் என 5000 லிருந்து, 10,000 பேர் நேபாளத்திலும், அங்கிருந்து இந்தியாவிற்கும் கடத்தப்படுகிறார் என்பது கூடுதல் தகவல்.

English summary
In earth quake hit Nepal the human trafficking for child labour and prostitution is on rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X