For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான் சூப்பர் மார்க்கெட்டில் "சிட்டி"!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மனித உருவம் கொண்ட ரோபோட் பணியாற்றி வருகிறது. அனைவரையும் இது கவர்ந்திழுத்தும் வருகிறது.

பாரம்பரியமான கிமோனோ டிரஸ் அணிந்து புன்னகையுடன் வேலை பார்க்கும் இந்த மனித ரோபோட், அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது. அய்கோ சிஹிரா என்பது இதன் பெயர்.டோக்கியோவில் உள்ள மிட்சுகோஷி டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழைவாயில் நின்றபடி கடைக்கு வருவோரை வணங்கி வரவேற்று அன்புடன் உள்ளே கூப்பிடுகிறது இந்த ரோபோட்.

இதை திடீரென பார்க்கும் யாருக்கும் ரோபோட் என்றே தெரியாது. மாறாக, மனிதனைப் போலவேதான் தெரியும். நெருங்கிப் பார்த்தால்தான் இது ரோபோட் என்று தெரிய வரும்.

சூப்பர் மார்க்கெட் வேலை...

சூப்பர் மார்க்கெட் வேலை...

டோஷிபா நிறுவனம் கடந்த ஆண்டு இந்த ரோபோட்டை உருவாக்கியது. ஆனால் திங்கள்கிழமைதான் இந்த ரோபோட் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தது.

மனிதர்களைப் போலவே...

மனிதர்களைப் போலவே...

ஜப்பானிய பாஷையில் பேசும் மிஹிரா, மனிதர்களைப் போலவே சிரிக்கிறது, பேசுகிறது, கண்ணை இமைக்கிறது. சீன மொழியும் வேறு சில மொழிகளையும் கூட இது பேசுகிறது.

43 மோட்டார்கள்...

43 மோட்டார்கள்...

பச்சரிசி கிலோ என்ன விலை மிஹிரா என்று சீன மொழியில் கேட்டால் கூட அதை சரியாக சொல்லுகிறதாம். மிஹிராவின் உடலில் 43 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம்தான் அது நடமாடுகிறது.

பாட்டுப் பாடவா...

பாட்டுப் பாடவா...

திங்கள்கிழமை நடந்த அறிமுக விழாவின்போது ஜப்பானிய பாடகர் ஷோகோ இவாஷிடாவுடன் இணைந்து பாட்டுப் பாடி அசத்தியது இந்த சுட்டி மிஹிரா.

English summary
Dressed in a kimono and smiling, Aiko Chihira greets shoppers at the entrance of Tokyo's Mitsukoshi department store. But Chihira is no regular employee -- she is a humanoid robot. Developed by Toshiba last year, the robot made its debut at the store on Monday in a new role interacting with customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X