For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏலியனில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான்: ஆதாரம் காட்டும் ஷேன் வார்னே

By Veera Kumar
Google Oneindia Tamil News

கேப்டவுன்: மனிதர்கள் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெறவில்லை, ஏலியன் எனப்படும் வேற்று கிரகவாசிகளிடமிருந்தே பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் பிரபலம் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வனப்பகுதிக்கு சென்றார் ஷேன் வார்னே. அங்கு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஷேன் வார்னே கூறிய கருத்து இப்போது உலகமெங்கும் டாக் ஆப் தி டவுன்-ஆக மாறிப்போயுள்ளது.

குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்கிறது டார்வின் கோட்பாடு. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் விஞ்ஞானிகள் மத்தியிலுள்ளது.

மதகோட்பாடு

மதகோட்பாடு

அதேநேரம், மத நூல்களில் கூறப்பட்டுள்ளதற்கு டார்வின் தியேரி நேர் எதிர்மாறாக இருப்பதாக கூறி பல மத குருமார்கள் அந்த கோட்பாட்டை முற்றாக புறக்கணிக்குமாறு, மத பின்பற்றாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

வார்னே ஷாக்

வார்னே ஷாக்

இந்நிலையில், மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து வேறு ஒரு பார்வையை முன் வைத்துள்ளார் ஷேன் வார்னே. நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பேசிய வார்னே, மனிதன், ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளிடமிருந்து உருவானதாக கூறி அதிர வைத்துள்ளார்.

குரங்கு மாறவில்லை

குரங்கு மாறவில்லை

குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றதாக வைத்துக்கொண்டால், இப்போதும் குரங்குகள் குரங்குகளாகவே உள்ளனவே... எந்த குரங்கும் நமது கண் முன்னே மனிதனாக மாறியதை பார்க்க முடியவில்லையே என்று தர்க்க கேள்வி எழுப்பியுள்ளார் வார்னே.

பிரமீடை கட்டியது யார்

பிரமீடை கட்டியது யார்

மேலும், எகிப்திலுள்ள பிரமீடுகளை பற்றி கூறியுள்ள வார்னே, பிரமீடுகளின் தோற்றம் பிரமிப்பூட்டுகிறது. அதை கட்ட பயன்படுத்திய கட்டுமானப்பொருட்களை அந்த காலத்தில் மனிதர்களால் தூக்கியிருக்கவே முடியாது. எனவேதான் சொல்கிறேன், ஏலியன்களே அதை கட்டியிருக்க வேண்டும் என்றும் வார்னே தனது தர்க்கத்திற்கு வலு சேரத்துள்ளார்.

ஏலியன் வடிவம்

எதிர்பார்த்தபடி, வார்னேயின் கருத்து, உலகெங்கும் உள்ள சமூக வலைத்தளவாசிகளின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

பரிணாம கோட்பாடு

டார்வின் பரிணாம கொள்கை போல, இது வார்னேயின் பரிணாம கொள்கை என படத்தோடு கேலி செய்கிறது இந்த டிவிட்.

English summary
Shane Warne has proposed a strange theory about where humans came from."we started from aliens.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X