For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்மூர்ல புலி கிலியக் கிளப்புனா.. ரஷ்யாவுல கரடி.. என்னா அதகளப் படுத்தி இருக்கு பாருங்க!

ரஷ்யாவில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் பனிக்கரடி ஒன்று உலா வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் உணவு தேடி பனிக்கரடி ஒன்று நகருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.

காடுகளை அழித்தல், உலக வெப்பமயமாதல் எனப் பல்வேறு காரணங்களால் காடுகளில் வாழும் விலங்குகள் பல உணவு, நீர் தேடி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகின்றன.

hungry and exhausted polar bear wanders into russian city

அதிலும் நம்மூரில் இது ரொம்பவே அதிகம். அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதும், புலி நகர்வலம் வந்து கிலி கிளப்புவதும் நாம் அடிக்கடி கேள்விப்படும் விசயங்கள் தான். நம்மூரில் யானை, புலி என்றால் ரஷ்யாவில் பனிக்கரடி ஒன்று ஊருக்குள் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷிய நாட்டின் செர்பியா பகுதியில் உள்ள நோரில்ஸ் நகருக்குள் தான் இந்த போலார் பனிக்கரடி நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளது. அதுவும் கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகள் நிறைந்த நகரின் மையப்பகுதியில் இது சுற்றித் திரிந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது.

இந்த போலார் பனிக் கரடியானது, பனி நிறைந்த கடற்கரை, ஆற்றுப்பகுதிகளில் காணப்படும் வகை ஆகும். உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் மாற்று வாழ்விடம் மற்றும் உணவு தேடி மனிதர்கள் வாழும் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தக் கரடியும் அப்படி வந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

இதுதொடர்பாக உள்ளூர் விலங்குகள் நல ஆர்வலர் ஒலேக் ஷிரேஷ்வேகை கூறுகையில், "பனிக்கரடி ஆர்ட்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் உணவு தேடி இடம் பெயர்ந்து நகருக்குள் வந்திருக்கலாம் அல்லது வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம். 40 ஆண்டுக்கு பிறகு போலார் பனிக்கரடி செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் சுற்றித்திரிவது இதுவே முதல் முறை" எனத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கரடி உணவுக்காக சுமார் 100 கிமீ தூரம் பயணித்து ஊருக்குள் வந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஊருக்கும் கரடி நடமாடும் வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

English summary
A starving and exhausted polar bear has been spotted wandering in Russia's northern city of Norilsk - hundreds of kilometres from its natural habitat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X