For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

17ம் நூற்றாண்டில் இறந்த எழுத்தாளர் உடலை ரூ.1 கோடி செலவிட்டு தோண்டியெடுக்கும் ஸ்பெயின்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Hunt on to find the remains of Miguel de Cervantes
மேட்ரிட்: 17ம் நூற்றாண்டில் மறைந்த எழுத்தாளர் உடலை தோண்டியெடுத்து அவருக்கு மரியாதை செய்ய ஒரு லட்சம் யூரோ செலவில் பணிகளை ஆரம்பித்துள்ளது ஸ்பெயின் அரசு.

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் மிகுயெல் த செர்வான்தெஸ்.

1605ம் ஆண்டில் இவர் எழுதிய டான் குவிக்ஸாட் என்ற கதைதான் இலக்கிய சரித்திரத்தில் வெளியான முதல் நவீன புதினம் என்று கருதப்படுகிறது. உலகெங்கும் இந்த கதைக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

நவீன நாவலின் தந்தை என்றும் இவர் வர்ணிக்கப்பட்டார். கடந்த 1616ம் ஆண்டு உயிரிழந்த மிகுயெல் தசெர்வான்தெஸ் உடல், டிரினிடேரியன்ஸ் கான்வெண்ட் என்ற மடத்தின், தேவாலய தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவருடைய கல்லரை எது என்பதை என்த ஆவணங்களும் தெளிவாக வரையறுக்கவில்லை.

இந்நிலையில் மிகுயெல் தசெர்வான்தெஸ் உடல் பாகங்களை கண்டுபிடித்து அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என நினைக்கும் ஸ்பெயின் அரசு, தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அவர் புதைக்கப்பட்ட தோட்டத்தை தோண்டப்போவதாக அறிவித்துள்ளது.

நிலத்தை ஸ்கேன் செய்து, கல்லரையைக் கண்டுபிடித்து, உடல் பாகங்களை தோண்டியெடுத்து, அது எழுத்தாளருடைய உடல் பகுதிதானா என்று ஆய்வு செய்யப்போவதாக ஸ்பெயின் அரசு கூறிவருகிறது.

இன்று ஆரம்பித்துள்ள இந்த பணியில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஜியோ ரேடார் கருவி பூமிக்குள் உடல் உறுப்புகள் எங்கே இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்தும் திறனுள்ளது.

இந்த பணிக்கு ஒரு லட்சம் யூரோ செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம் வரை செலவுபிடிக்கும்.

English summary
Forensic scientists in Spain have announced plans to search a Madrid convent for the body of the 17th Century author, Miguel de Cervantes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X