For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடத்தில் மனைவியை அடித்த கணவன்- 8 வருடம் சிறை

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாட்டில் பொது இடத்தில் மனைவியை தாக்கிய இந்தியர் ஒருவருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் 8 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இந்திய தம்பதியர் மூன்றாண்டு கால இல்லற வாழ்க்கை கசந்துப் போனதால் பிரிந்து வாழ்வதென தீர்மானித்தனர்.

அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்து தீர்ப்புக்காக காத்திருந்தனர்.

நோ தொந்தரவு!:

இடைப்பட்ட காலத்தில் தன்னை கணவர் வந்து பார்க்கக் கூடாது, எவ்விதத்திலும் தொந்தரவு தரக் கூடாது என்று கோர்ட் மூலம் மனைவி இடைக்கால தடை பெற்றிருந்தார்.

கடையில் தகராறு:

இந்த தடையை மீறி கடந்த மாதம் அந்த பெண் வேலை செய்த "பீட்ஸா" கடைக்கு சென்ற முன்னாள் கணவர் அவருடன் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார். அங்கிருந்த சாப்பிட பயன்படுத்தும் கத்தியால் அவரது தோள்பட்டையில் குத்தியும் காயப்படுத்தினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்:

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாஜி கணவன் மீது ரிங்வுட் நீதிமன்றத்தில்அவரை ஒப்படைத்தனர்.

மனநலம் சரியில்லை:

இவ்வழக்கு விசாரணையின் போது தனக்கு மனநலம் சரியில்லாததால் இதுபோல் நடந்துக் கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுதலை செய்தால் இந்தியாவுக்கு சென்று சிகிச்சை பெற விரும்புவதாகவும் குற்றவாளி கூறினார்.

8 மாதம் சிறையில் அடைப்பு:

அதனை ஏற்க மறுத்த நீதிபதி "நீங்கள் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு சென்றாலும் திரும்பி வரமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனை கருத்தில் கொண்டு உங்களை 8 மாதம் சிறையில் அடைக்கும்படி உத்தரவிடுகிறேன்" என்று தீர்ப்பளித்தார்.

English summary
An Indian husband banned to jail in Australia for making problem with his divorced wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X