For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூ டர்ன் போட்ட WHO.. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

Google Oneindia Tamil News

ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மலேரியா மருந்தை, கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பரிசோதனைகள் செய்ய மீண்டும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Recommended Video

    அவசர காலத்தில் பயன்படுத்த ரெம்டெசிவர் மருந்துக்கு இந்தியா ஒப்புதல்

    COVID-19 நோயாளிகளிடையே இந்த மருந்து இறப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கைக்கு பிறகு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    Hydroxychloroquine coronavirus trials to resume, says WHO

    COVID-19 நோயாளிகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்திருந்தார்.

    ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பொதுவாக, மலேரியா மற்றும் மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் செயல்படுவதாக ஆணித்தரமாக கூறி வந்தனர்.

    Hydroxychloroquine coronavirus trials to resume, says WHO

    இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை நிறைய ஆர்டர் செய்து பெற்றது அமெரிக்கா. வேறு பல நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்தது.

    கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு! கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு!

    இந்த நிலையில்தான் WHO தற்போது, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், கொரோனாவுக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது ஆய்வு அளவில்தான் உள்ளதே தவிர, கொரோனாவை இந்த மருந்து குணப்படுத்தும் என்பதற்கான அறிவியல் பூர்வ அறிவிப்பு இல்லை.

    English summary
    World Health Organization (WHO) says hydroxychloroquine coronavirus trials to resume.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X