For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வேண்டாம்.. 'அவருக்கு' தரலாம்.. இம்ரான்கான் ட்வீட்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு நான் தகுதியானவர் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்துடனான விண்வெளி சண்டையின்போது, இந்திய விமானப்படை பைலட், அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் பாராசூட்டில் குதித்த போது அந்த நாடு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

I am not worthy of the Nobel Peace prize: Imran Khan

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் அபிநந்தனை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதாக இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் குறைந்து உள்ளது. இந்த நிலையில்தான் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வைரலாக பரவியது.

மாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்புமாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்பு

இம்ரான் கான் அரசின், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவத் சவுத்ரி நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதில் 'அமைதிக்கான நோபல் பரிசு இம்ரான் கானுக்கு வழங்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் தகுதியானவர் இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க, காஷ்மீர் விவகாரத்தில் யார் தீர்வு காண்கிறார்களோ அவர்கள்தான் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். இந்தப் பிராந்தியத்தில் அமைதியையும், மனித மேம்பாட்டையும் உறுதிசெய்யும் அவருக்கே, நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
I am not worthy of the Nobel Peace prize. The person worthy of this would be the one who solves the Kashmir dispute according to the wishes of the Kashmiri people and paves the way for peace & human development in the subcontinent, says Pakistan PM Imran Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X