For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் ஆதரவு விவகாரத்தில் என்னை கைது செய்தால் சந்திக்க தயார்- பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

Google Oneindia Tamil News

பினாங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தம்மை கைது செய்தால் அதை ஆதரிக்க தயார் என மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 தமிழரை கைது செய்துள்ளது மலேசியா. அடுத்ததாக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

I am ready to face arrest for lInks with LTTE,says PDM Ramasamay

மலேசியா எம்.பி.க்கள் சிலரும் இதை வலியுறுத்தி வருகின்ண்றனர். இதனால் ராமசாமியின் இல்லம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் தம்மை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, இந்தியாவைச் சேர்ந்த ஜாஹிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதனால்தான் அவரது ஆதரவாளர்கள் எங்களை சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள்.

மலேசியா அராசாங்கமானது ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரிக்கிறது.. ஏன் ஈழத் தமிழர்களை மட்டும் ஆதரிக்க மறுக்கிறது? நாங்கள் ஆயுதம் ஏந்திய ரத்தம் சிந்தும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

இலாங்கையில் 1௦ ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது எடுத்த படங்களை வைத்து விசமத்தனம் செய்கின்றனர். இப்பிரச்சனையில் என்னை கைது செய்தால் எதிர்கொள்ள தயார். எங்கும் தலைமறைவாக மாட்டேன். சட்டப்படி எதிர்கொள்வேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

English summary
Penang Deputy Chief Minister Ramasamy said that he is ready to face the arrest for the links with LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X