For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு என்ன செய்தீர்களோ அதையே ஹிலாரிக்கும் செய்யுங்கள்- ஒபாமா

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் ஒபாமா அதிபராக எனக்கு வாய்ப்பளித்தது போல் ஹிலாரிக்கும் வாய்யப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிபர் ஒபாமா அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'I ask you to do for hillary what you did for me' President obama last day campaign for hilary

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரிக்காக அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மிச்சிகன் பல்கலைகழகத்தில் இறுதி நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிபர் ஒபாமா அங்கு திரண்ட மக்களிடையே, அதிபர் ஆக எனக்கு என்ன செய்தீர்களோ அதையே ஹிலாரிக்கும் நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.

ஹிலாரி குறித்து வரும் குற்றச்சாட்டுகள் என்னை நாக்கை கடிக்க வைப்பதாக கூறிய ஒபாமா, அவர் மீதான குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானவை என்றார்.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஹிலாரியை மட்டுமே முன்னிலைப் படுத்தி பேசிய ஒபாமா, ட்ரம்ப் குறித்து பேச நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து துர்ஹாம் பகுதியில் உள்ள ஹாம்பையர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஒபாமா பங்கேற்றார்.

அப்போது நீங்கள் யாருக்கு வாக்களிக்கும் முன்பாக யாரை அதிபாராக தேர்வு செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அமெரிக்க அதிபராவதற்கு ட்ரம்ப் தகுதியில்லாதவர் என்றும் ஒபாமா தெரிவித்தார்.

கடந்த 6 நாட்களில் ஒபாமா பங்கேற்ற கூட்டங்களிளேயே ஹாம்பையர் பல்கலைக் கூட்டத்தில் கூடியது தான் மிகப்பெரிய கூட்டம் என்று பெருமிதம் கொண்ட ஒபாமா, இந்தக் கூட்டத்தை வெல்பவர் நிச்சயம் அதிபராகலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
US president barack obama final campaign for hillary. He campaighned in michchigan university in Ann Anrbor and hamphire university in Durham. asked people to do for hillary what you did for me.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X