For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு தாலும், கீமாவும் சமைக்கத் தெரியும் மிஸ்டர் ஷெரீப்: ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தனக்கு தாலும், கீமாவும் சமைக்கத் தெரியும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வைத்து நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து ஒபாமா மற்றும் ஷெரீப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஒபாமா கூறுகையில்,

பாகிஸ்தான் சென்றேன்

பாகிஸ்தான் சென்றேன்

1980ல் நான் இளைஞனாக இருந்தபோது பாகிஸ்தான் சென்றதை ஷெரீப்பிடம் தெரிவித்தேன். கல்லூரியில் படிக்கையில் என்னுடன் 2 பாகிஸ்தானியர்கள் தங்கியிருந்தனர். அதனால் அங்கு சென்றேன் என்றார் ஒபாமா.

தால், கீமா

தால், கீமா

நான் பாகிஸ்தான் சென்றபோது எனது நண்பர்களின் தாயார்கள் தால் (பருப்பு), கீமா உள்ளிட்ட அவர்கள் நாட்டு உணவு வகைகளை எப்படி சமைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தனர். அது அருமையான பயணமாக அமைந்தது. தற்போது எனக்கும் தால் மற்றும் கீமா ஆகியவற்றை சமைக்கத் தெரியும் என்று ஒபாமா தெரிவித்தார்.

ஷெரீப்

ஷெரீப்

ஒபாமா செய்தியாளர்களுடன் பேசுகையில் நவாஸ் ஷெரீப் மிகவும் சீரயஸாக முகத்தை வைத்திருந்தார். ஆனால் ஒபாமா தால், கீமாவை பற்றி பேசியதும் தான் அவருக்கு சிரிப்பே வந்தது.

பாகிஸ்தான் வாங்க சாப்பிடலாம்

பாகிஸ்தான் வாங்க சாப்பிடலாம்

தால், கீமா பேச்சைக் கேட்ட ஷெரீப் ஒபாமாவையும், அவரது மனைவி மிஷலையும் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானுக்கு வந்தால் தால் மற்றும் கீமா சாப்பிடலாம் என்றார் ஷெரீப்.

English summary
Recalling his visit to Pakistan during college days in 1980s, Barack Obama today told Nawaz Sharif that he knows how to cook daal and keema, taught by the mother of his Pakistani roommates. Obama's remarks prompted Sharif to invite the US President and the First Lady Michelle to his country to try the delicacies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X