For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிஜமாவே இவரு குளிச்சு 12 வருசம் ஆச்சாம்... டெய்லி ‘ஸ்பிரே’ தான் அடிச்சிக்கறாராம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக குளிப்பதில்லையாம். அதற்குப் பதிலாக நன்மை தரும் பாக்டீரியாக்களைக் கொண்ட ஸ்பிரேவைத் தினமும் உடலில் அடித்துக் கொள்கிறாராம்.

‘குளிக்காம வெறும் சென்ட் மட்டும் அடிச்சிட்டு வந்துட்டியா?' என நாம் மற்றவர்களைக் கிண்டல் செய்வோம். ஆனால், நிஜமாகவே அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளர் 12 ஆண்டுகளாக குளிக்காமல் வெறும் ஸ்பிரே மட்டும் தான் அடித்துக் கொண்டு சுற்றுகிறாராம்.

12 ஆண்டுகள் குளிக்கவில்லை என்றதும், அவர் நமது சினிமாக்களில் வரும் நாயகர்கள் போல் நீண்ட தாடியுடன், அழுக்கு மூட்டையாக காட்சியளிப்பார் என நீங்கள் கற்பனை செய்தால், அது தவறு. காரணம், இந்த ஆராய்ச்சியாளர் தண்ணீர் கொண்டு உடலைக் கழுவிக் குளிப்பதில்லையே தவிர, உடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஸ்பிரே கொண்டு உடலில் தினமும் தெளித்துக் கொள்கிறார். இதன் மூலம் இவர் தனது உடலைச் சுத்தப்படுத்திக் கொள்கிறார்.

டேவ் விட்லாக்...

டேவ் விட்லாக்...

இந்த ஆராய்ச்சியாளரின் பெயர் டேவ் விட்லாக். இவர் அமெரிக்காவின் பிரபல எம்.ஐ.டி. தொழிற்கல்வி நிறுவனத்தில் வேதிப் பொறியாளர் பட்டம் பெற்றவர். தற்போது ஏ.ஓ.பி.ஐயோம் என்னும் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.

பாக்டீரியா கலவை...

பாக்டீரியா கலவை...

இவரது தயாரிப்பு தான், இந்த நன்மை பயக்கும் பாக்டீரியா கலவை. தண்ணீர் போல வாசனை ஏதுமின்றி உள்ள இந்தக் கலவையை தினமும் இருமுறை உடல் மீது தெளித்துக் கொண்டால் போதுமாம். அது உடலில் இருக்கும் தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்களையும், துர்நாற்றத்தையும் போக்கி விடும்.

குளிக்க வேணாம்...

குளிக்க வேணாம்...

இது தொடர்பாக டேவ் கூறுகையில், ‘சுத்தம் என்கிற பெயரில் நாம் தினமும் குளிக்கின்றோம், அது நம் உடல் மீது உள்ள பாக்டீரியாக்களை போக்க உதவாது. ஆகவே, நாம் முழுச்சுத்தம் அடைய இந்த பாக்டீரியா கலவை போதும், குளியல் தேவையில்லை' என்கிறார்.

மதர் டர்ட்...

மதர் டர்ட்...

டேவ் தனது இந்த பாக்டீரியா கலவை நீருக்கு, ‘மதர் டர்ட்' என பெயர் சூட்டியுள்ளார். இது தவிர, இவரிடம் இதே வகை ஷாம்பூவும் உள்ளதாம்!

வெள்ளையா இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க பாஸ்...நம்புவோம்!

English summary
Chemical engineer and MIT grad Dave Whitlock has not showered in a dozen years to save his good bacteria. Instead Whitlock sprays a mist containing live bacteria on his skin twice a day, Mother Dirt, which is sold by the Cambridge-based company he helped found, AOBiome, according to CBS Boston.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X