For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

38,000 அடி உயரத்தில் இருந்து 'ஐ லவ் யூ': ஏர் ஏசியா பணிப்பெண் காதலனுக்கு கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

ஜகர்தா: நான் 38 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து உன்னை காதலிக்கிறேன் என ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் பணிப்பெண் ஹைருன்னியா ஹைதர் பவ்சி தனது காதலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாவா கடலில் இருந்து இதுவரை விமான பணிப்பெண் உள்பட 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பணிப்பெண் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஹைருன்னியா ஹைதர் பவ்சி(22) என்பது தெரிய வந்துள்ளது.

காதல்

காதல்

ஹைருன்னிஸா தான் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு விமானத்தில் இருந்து தனது காதலர் திவோவுக்கு ஒரு கடிதம் எழுதி அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் நான் 38 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து உன்னை காதலிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹைருன்னிஸா

ஹைருன்னிஸா

ஹைருன்னிஸா விமானத்தில் செல்கையில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளார்.

காதலர்

காதலர்

ஹைருன்னிஸா கடற்கரை மணலில் தனது காதலர் மற்றும் தன்னுடைய பெயரை எழுதி அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

திவோ

திவோ

ஹைருன்னிஸா விமானத்தின் ஜன்னல் அருகே லவ் திவோ என்ற வடிவில் தனது விரல்களை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பெற்றோர்

பெற்றோர்

கடவுளிடம் இருந்து எங்கள் மகளை கடன் வாங்கினோம். தற்போது கடவுளே அவரை திரும்பவும் வாங்கிக் கொண்டார் என்று ஹைருன்னிஸாவின் தந்தை ஹைதர் தெரிவித்தார். ஹைருன்னிஸா பிறருக்கு உதவி செய்வதற்கு பெயர் போனவராம். மேலும் பணிக்கு சென்றால் தினமும் 4 முறை வீட்டுக்கு போன் செய்து பேசுவாராம்.

English summary
Illfated Air Asia flight attendant 22-year-old Khairunisa Haidar Fauzi wrote a love letter from the sky just two weeks before she got killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X