For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் வலதுசாரி.. என்னை அசைக்க முடியாது.. பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக மறுப்பு.. இஸ்ரேலில் குழப்பம்!

என்ன நடந்தாலும் பதவி விலக முடியாது, வலதுசாரி கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: என்ன நடந்தாலும் பதவி விலக முடியாது, வலதுசாரி கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க தற்போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்று வலதுசாரி தலைவர்கள்தான் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். உலகம் முழுக்க தற்போது வலதுசாரி தத்துவம் முக்கியமானதாக வளர்ந்து இருக்கிறது.

இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டது என்று பார்த்தால் அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுதான். உலகின் மிக முக்கியமான வலதுசாரி தலைவராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்க்கப்படுகிறார்.

ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு!ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு!

சிக்கல்

சிக்கல்

ஆனால் தற்போது அவரின் ஆட்சி கடுமையாக சிக்கலில் மாட்டி தவித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இஸ்ரேலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. அங்கு எப்போது வேண்டுமானாலும் அரசியல் புரட்சி வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிறைய ஊழல்களை செய்துவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது 6 க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் இருக்கிறது. அங்கு இருக்கும் மீடியாக்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது, நிறைய பரிசு பொருட்களை கோடிக்கணக்கில் வாங்கியது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.

என்ன மிரட்டினார்

என்ன மிரட்டினார்

செய்தி நிறுவனங்களை மிரட்டினார், பல கோடி அரசு நிதியை தனக்காக செலவு செய்து கொண்டார் என்று இவர் மீது புகார் உள்ளது. இந்த புகார்களுக்கு எதிராக இவர் மீது முதல் தகவல் அறிக்கை, சார்ஜ் சீட் இரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 மாதமாக இருந்த பிரச்சனை கடந்த வாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

அங்கு தற்போது அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் தொடங்கி பல முக்கிய அதிகாரிகள், எதிர்க்கட்சிகள் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். நேற்று இந்த கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. பலரும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக நேற்று அறிக்கைகளை வெளியிட்டனர்.

ஆனால் மறுப்பு

ஆனால் மறுப்பு

ஆனால் தற்போது பெஞ்சமின் நெதன்யாகு தான் பதவி விலக முடியாது என்று உறுதியாக அறிவித்துவிட்டார். என்னுடைய ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பொய்யான புகார்களை அளிக்கிறார்கள். இதில் அண்டை நாட்டின் சதி திட்டங்கள் இருக்கிறது. வலதுசாரி அரசை நீக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நடக்காது

ஆனால் நடக்காது

ஆனால் அது எப்போதும் நடக்காது. என்னை விசாரிக்க வேண்டும் என்று நினைத்தவர்களை நான் விசாரிக்க போகிறேன். ஆம், விரைவில் சில முக்கிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். ஆனால் கண்டிப்பாக பதவி விலக மாட்டேன் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதனால் அங்கு மக்கள் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

English summary
I won't resign, I am a right-wing says Defiant Israel PM Benjamin Netanyahu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X