For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 லட்சம் பணியாளர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்கிறதா ஐபிஎம்? ஐடி ஊழியர்கள் அச்சம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களை வேலையை விட்டு தூக்கியடித்த நிலையில், மற்றொரு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான, ஐபிஎம் நிறுவனம் 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஒட்டுமொத்தமாக பணியாளர்களை பணி நீக்கம் செய்துவருவதாக சர்ச்சை வெடித்த நிலையில், நியூயார்க்கை தலைமையகமாக கொண்ட ஐபிஎம் என்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் அதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பன்னாட்டு நிறுவனம்

பன்னாட்டு நிறுவனம்

அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என பல பகுதிகளிலும் ஐபிஎம் நிறுவன கிளைகள் இயங்கிவருகின்றன.

4 லட்சத்துக்கும் அதிகம்

4 லட்சத்துக்கும் அதிகம்

ஐபிஎம் நிறுவனத்தில் மொத்தம் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றிவருகின்றனர்.

1.12 லட்சம் பேரா..?

1.12 லட்சம் பேரா..?

இந்நிலையில் 1 லட்சத்து 12 ஆயிரம் ஊழியர்களை திடீரென பணியில் இருந்து நீக்க ஐபிஎம் திட்டமிட்டுள்ளதாக போர்ப்ஸ் என்ற நியூஸ் இணையதளம், செய்தி வெளியிட்டுள்ளது. பணி நீக்கமும் இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதனால் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

யூக செய்தி

யூக செய்தி

இதனிடையே ஐபிஎம் நிறுவனம் அந்த செய்தியை மறுத்துள்ளது. இதுகுறித்து ஐபிஎம் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "யூகங்களுக்கும், அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.

பணி நீக்கம் உண்டு, ஆனால் ஆயிரங்களில்

பணி நீக்கம் உண்டு, ஆனால் ஆயிரங்களில்

"பணியாளர் நீக்கம் குறித்து எங்களிடம் கேட்டால் கூட சொல்லியிருப்போமே. 600 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு சேமிப்புக்காக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை ஏற்கனவே நாங்கள் அறிவித்துள்ளோம். அதன்படி செய்தால், சில ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள். அந்த ஊடக செய்தியை போல லட்சத்துக்கு மேல் பணியாளர் நீக்கம் போகாது" இவ்வாறு ஐபிஎம் தனது அறிக்கையில் மேலும், கூறியுள்ளது.

வருடந்தோறும் வழக்கம்

வருடந்தோறும் வழக்கம்

ஐபிஎம் நிறுவனம், ஆண்டுதோறும், குறைந்தது 6,500 முதல் அதிகபட்சம் 21 ஆயிரத்து 500 பேர் வரை பணியில் இருந்து நீக்குவது வழக்கம். கடந்த ஏழு வருடங்களாக ஐபிஎம் இதுபோலத்தான் செய்து வருகிறது. இந்நிலையில்தான் இந்த ஆண்டு பணி நீக்க எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என்று செய்தி வெளியாகியது.

8 ஆயிரம் பேர் என்று தகவல்

8 ஆயிரம் பேர் என்று தகவல்

2012ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தில் 434,246 பேர் பணியாற்றி வந்தனர். இந்த எண்ணிக்கை 2013ல் 431,212-ஆக குறைந்தது. கடந்த ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் எத்தனைபேர் பணியாற்றினர் என்ற விவரத்தை அந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இதனிடையே, அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை, ஐபிஎம் இவ்வருடம் 8 ஆயிரம் பணியாளர்களை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கில் இல்லை என்றும் ஆறுதலாக செய்தி வெளியிட்டுள்ளது.

English summary
IBM dismissed on Monday a Forbes magazine report claiming the technology firm is preparing to cut about 26 percent of its workforce, which would represent its biggest-ever layoffs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X