For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Kulbhushan Jadhav | குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு!சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

    திஹேக்: பாகிஸ்தானில் இந்திய குடிமகன் குல்பூஷண் ஜாதவை தூக்கில் போட சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷண் ஜாதவுக்கு உரிமை உள்ளதாகவும், குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ICJ asks Pakistan to review conviction, sentencing of kulbhushan Jadhav

    இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் 'ரா' அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

    இந்தியா தரப்பில் "வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டது.

    இந்தநிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனையை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    English summary
    #KulbhushanJadhav’s death sentence should remain suspended until Pak effectively reviews and reconsiders the conviction
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X