For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2.5 கிமீ நீளமுள்ள காசா - இஸ்ரேல் ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: காசாவிலிருந்து இஸ்ரேல் வரைத் தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றினை இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டில்,இதேபோல் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை வழியே இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றின் நுழைவு வாயிலை இஸ்ரேல்-காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதையானது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டுபிடிக்கும் வரை பயன் படுத்தப் பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப் படுகிறது. எனவே, கடந்த ஒரு வாரகாலமாக அச்சுரங்கப் பாதையில் ஏதேனும் வெடிபொருள் மறைத்து வைக்கப் பட்டுள்ளதா என ஆராயப் பட்டது.

இது போன்ற சுரங்கப்பாதைகள் மூலம் ஹமாஸ் பிரிவினர் இஸ்ரேலைத் தாக்கவோ அல்லது இஸ்ரேலியர்களைப் பிடிக்கவோ திட்டமிட்டிருக்கலாம் என இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரகசிய சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக காசாவிற்கு செல்லவிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்த ராணுவத்தினரை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்ஞாஹு பாராட்டியுள்ளார்

ஆயினும், ரகசிய சுரங்கத்தை ஹமாஸ் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அந்நாட்டு ராணுவத் தகவல் அதிகாரியான அபு ஒபைடா. மேலும், ‘இஸ்ரேல் ராணுவத்தினர் இதுபோல் இன்னும் ஆயிரக்கணக்கான சுரங்கங்களைத் தோண்டக்கூடும்' என அவர் தனது இணையதளத் தகவலில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

English summary
The Israel Defense Forces has discovered a tunnel running across the border with the Gaza Strip which security forces believe Palestinian militants were planning to use to enter Israel and attack soldiers or civilians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X