For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“கிரகாம்”.. கார் விபத்தில் சிக்கி உயிர் மீளும் மனிதர் எப்படி இருப்பார்.. இந்த வீடியோ பதில் சொல்கிறது

Google Oneindia Tamil News

சிட்னி: கார் விபத்துக்களில் சிக்கியும் சிதையாமல் இருப்பது சாத்தியமா.. அப்படி இருந்தால், அப்படிப்பட்ட மனிதர்கள் எப்படி இருப்பார்கள்.. இதற்கு விடை கொடுத்துள்ளது ஆஸ்திரேலிய போக்குவரத்து விபத்துத் தடுப்பு ஆணையம்.

கார் விபத்துக்களில் சிக்கி உயிர் மீளும் வாய்ப்பு உள்ள மனிதர் இப்படித்தான் இருப்பார் என்று அது தயாரித்துள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வரும் நபரின் பெயர் கிரகாம். அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட மனிதன்தான் கிரகாம்.

கார் விபத்துக்களால் கூட உயிரிழக்க வாய்ப்பே இல்லாத ஒரே மனிதன்தான் கிரகாம் என்று அந்த வீடியோ கூறுகிறது. அதில் வரும் கிரகாமுக்கு வித்தியாசமான உருவம் கொடுத்துள்ளனர் அனிமேஷன் மூலமாக.

விலாவில் ஏர்பேக்...

விலாவில் ஏர்பேக்...

கிரகாமுக்கு விலா எலும்புகளில் ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. தலையில் மண்டை ஓடு வலுவாக, பெரிதாக உள்ளது. மூளை காயமடையாமல் காப்பதற்காகவாம் இது.

கழுத்தே கிடையாது...

கழுத்தே கிடையாது...

முகம் தட்டையாக உள்ளது. அதில் ஏகப்பட் கொழுப்பு சேர்த்து பொதுக் பொதுக் என மாற்றியுள்ளனர். தற்காப்புக்காக இது. பிறகு கழுத்தே கிடையாது. இருந்தால்தானே எலும்பு முறிவு ஏற்படும். எனவே கழுத்தே இல்லை.

கற்பனை மனிதர்...

கற்பனை மனிதர்...

இதுதான் கிரகாம். சாலை போக்குவரத்து விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட வீடியோ இது, கற்பனை மனிதர்தான் கிரகாம். இப்படியெல்லாம் இருந்தால்தான் நாம் உயிர் தப்ப முடியும். ஆனால் தற்போது உள்ள நமது உடல் வடிவமைப்பில் அதற்கான சாத்தியமே இல்லை, விபத்து நேர்ந்தால் நிச்சயம் உயிர் போகும் அல்லது காயமடைவோம் என்று இந்த விளம்பரம் கூறுகிறது.

வேகம்...

வேகம்...

இதுகுறித்து இந்த விளம்பரக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘நமது உடலை விட வாகனம் வேகமாக செல்லும் வகையில் உள்ளது. அந்த வேகத்தைத் தாங்கக் கூடிய சக்தி நமது உடலில் இல்லை. எனவே விபத்தில் சிக்கினால் நிச்சயம் பாதிப்பு வரும்' என்றார் அவர்.

பாதுகாப்பு வீடியோ...

மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் இதுபோல வித்தியாசிமான விளம்பரங்களை தயாரித்து மக்கள் மத்தியில் உலவ விடுவது ஆஸ்திரேலிய போக்குவரத்துத் துறையின் ஸ்டைல் ஆகும். கடந்த 2012ம் ஆண்டு இப்படித்தான் ஒரு ரயில் பாதுகாப்பு வீடியோ வித்தியாசமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

English summary
If human beings were equipped to survive car crashes, they would look something like Graham, shown in the video above. Graham has protective air sacs lining the rib cage, a thick skull to prevent brain trauma, a flat face with lots of fatty tissue for added protection, and no neck to prevent spine injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X