For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன்: முஷாரப்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பதிலடி

பதிலடி

நான் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியா இப்படி தாக்குதல் நடத்தியதற்கு தக்க பதிலடி கொடுத்திருப்பேன். இந்த இடத்தில் இந்த நேரத்தில் தாக்குவோம் என அவர்கள் மிரட்டுகிறார்கள் என பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்கள். இது சீரியஸான விஷயம்.

இந்தியா

இந்தியா

போர் சூழலை இந்தியா தான் ஏற்படுத்துகிறது என நான் நினைக்கிறேன். இந்தியா எப்பொழுதுமே இப்படி தான் செய்யும். இது ஒன்றும் முதல் முறை அல்ல. அது எப்பொழுதுமே இதை தான் செய்து வருகிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நாட்டில் ராணுவம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பாகிஸ்தான் அரசிலும் ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யும் அரசுகள் சரியில்லை.

ராணுவம்

ராணுவம்

பாகிஸ்தானில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மக்கள் ராணுவ தளபதியிடம் தான் ஓடி வருகிறார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு ராணுவத்தை மிகவும் பிடிக்கும். அதனால் ராணுவத்தில் இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

English summary
Pakistan's former president Pervez Musharraf said that if he were in power, he would be "counter-threatening" India in the wake of the recent surgical strikes in Pakistan-occupied Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X