For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரம்ப் ‘ம்’ சொன்னால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல்.. அமெரிக்க கடற்படை தளபதி தடாலடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரெடியாக உள்ளதாக அந்நாட்டு கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆணையிட்டால் உடனடியாக சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடித்த தயாராக இருப்பதாக அந்நாட்டுக் கடற்படை தளபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமெரிக்க-ஆஸ்திரேலிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தக் கூட்டுப் பயிற்சியை வடகிழக்கு பகுதியில் இருந்து சீனா கண்காணித்து வருவதாகப் பரபரப்பு தகவல்கள் பரவியது.

If Trumps says yes, will launch nuclear strike on China says US Navy commander

இதனிடையே, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் கலந்து கொண்டார். அப்போது, ஸ்காட் ஸ்விப்ட், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கூறினார்.

தென் சீன கடல் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், சீனாவின் ஆதரவால்தான் வடகொரியா துணிச்சலாகச் செயல்படுவதாக அமெரிக்கா சீனாவின் மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் உத்தரவிட்டால் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரெடி என்று கடற்படை தளபதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
US Navy commander said, If President Trump says ‘yes’ he would launch nuclear strike on China next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X