• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Exclusive: கொரோனாவை தடுக்க இதை ஃபாலோ செய்யுங்கள்.. சீனாவிலிருந்து இலக்கியா அட்வைஸ்.. தட்டாதீங்க!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் குறித்து உங்கள் மனதில் குழப்பமும் பயமும் வேண்டாம் என சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் இலக்கியா அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

  இந்திய மக்களுக்கு இலக்கியா தரும் செய்தி

  இதுகுறித்து சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் இலக்கியா நமது ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் ஒன் இந்தியா தமிழ் நேயர்களுக்கு வணக்கம். நான் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. சீன தேசிய சுகாதார ஆணையகத்தின் தொடர்புடைய தகவலின்படி மார்ச் 24 ஆம் நாள் சீனாவின் மாநிலங்களில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆகும். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்தவர்கள். குணமடைந்தோரின் எண்ணிக்கை 491 ஆகும்.

  கொரோனா வைரஸை இனி சீனா வைரஸ்ன்னு சொன்னீங்கன்னா.. சீனா தூதர் கோபத்துடன் அளித்த விளக்கம் கொரோனா வைரஸை இனி சீனா வைரஸ்ன்னு சொன்னீங்கன்னா.. சீனா தூதர் கோபத்துடன் அளித்த விளக்கம்

  கொரோனா வைரஸ்

  கொரோனா வைரஸ்

  ஹூபெய் மாநிலம் தவிர சீனாவின் இதர பகுதிகளில் 90 சதவீதம் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. சீனர்களின் உணவு பழக்கவழக்கம் பற்றி தவறான தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் கொரோனா வைரஸ் எதிலிருந்து தோன்றியது என்பது இன்னும் உறுதியாகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. வனவிலங்குகளை சாப்பிடுவது சீனர்களின் சாப்பாட்டு பழக்கம் அல்ல.

  பாதிப்பு

  பாதிப்பு

  மிகக் குறைந்தினர் மட்டுமே தற்போது அவ்வாறு செய்கின்றனர். வனவிலங்குகள் விற்பனைக்கும் உணவுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதற்கு சான்று எதுவும் இல்லை. இந்த நோய் தொற்று கண்டறியப்பட்ட உடனே சீன அரசு காலதாமதமின்றி தகவலை வெளியிட்டது. உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இந்த நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது.

  மருத்துவமனைகள்

  மருத்துவமனைகள்

  தினமும் புதிதாக நோய் வாய்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நகர போக்குவரத்து வேகமாக முடக்கப்பட்டது. கண்டிப்புடன் தனிமைப்படுத்தல் விதிகள், தற்காலிக மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை வுகான் நகரை தவிர தொடர்ந்து 7 நாட்களாக ஹூபெய் மாநிலத்தில் புதிய நோய் தொற்று எவருக்கும் இல்லை.

  வைரஸ் தடுப்பு

  வைரஸ் தடுப்பு

  வுகான் நகரத்தில் போக்குவரத்து முடக்கம் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது. இந்த நகரிலிருந்து வேறொரு நகரங்களுக்கு செல்வோர் சுகாதார அடையாள சான்று கொண்டு இயல்பாக பயணிக்க முடியும். ஹூபெய் மாநிலத்தில் பல தொடர்வண்டி நிலையங்களில் (ரயில்கள்) கிருமி நீக்கப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. காணொலி கூட்டம், மருத்துவ நிபுணர்கள் குழுவை அனுப்புவது உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் சீனா, பல நாடுகளுடன் வைரஸ் தடுப்பின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறது.

  இந்திய நோயாளிகள்

  இந்திய நோயாளிகள்

  கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனைகளை கூறுகிறேன். மனதில் குழப்பமும் பயமும் வேண்டாம். வெளியே செல்லும் போது முகக் கவசத்தை அணியவும். கைகளால் முகத்தை தொட வேண்டாம். வீட்டுக்கு திரும்பிய உடனே உடனடியாக கைகளை கழுவுங்கள். பாதிக்கப்பட்ட இந்திய நோயாளிகள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றார் இலக்கியா.

  English summary
  China Radio Tamil department Ilakkiya advises Indian people how to avoid Coronavirus.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X