For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 18 பேர் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 பேர் பலியாகினர்.

வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.

'Illegal' coal mining cause of deadly explosion killed 19 in northern China

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்கள் மரணமடைந்ததாகவும், 2 பேரை காணவில்லை என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காணாமல் போன இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நிலக்கரி சுரங்கத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மேம்பாடுகள் காரணமாக நிலக்கரி உற்பத்தி அதிகம் நடைபெறும் சீனாவில் சமீப காலமாக விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ள நிலையில், தற்போது இந்த விபத்து நடந்துள்ளது.

English summary
The explosion on Tuesday morning occurred at a small coal mine when 20 miners were working underground in the city of Shizuishan, in the northwestern region of Ningxia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X