For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சல்மானுக்கு போன் போட்ட இம்ரான்.. சவுதி, அமீரக உதவியை நாட முடிவு.. நீடிக்கும் பதற்றம்!

பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதி, அமீரக உதவியை நாட இம்ரான் முடிவு, நீடிக்கும் பதற்றம்!- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார்.

    நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் பெற முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.

    சவுதி அரேபியா

    சவுதி அரேபியா

    இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கால் செய்து பேசி இருக்கிறார். பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இவர் சல்மானிடம் பேசியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் இவர்கள் பேசினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

    அரபு அமீரகம்

    அரபு அமீரகம்

    அதேபோல் அரபு அமீரகத்துடனும் இம்ரான் கான் பேசி இருக்கிறார். அரபு அமீரக முடி இளவரசர் ஷேக் முகமது பின் சயாத்துடன் நேற்று இம்ரான் கான் மாலை நேரத்தில் பேசி இருக்கிறார். அதேபோல் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வீடியோ கால் மூலம் அவசர ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

     உதவி கேட்கிறார்

    உதவி கேட்கிறார்

    சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உதவியை கோரவே பாகிஸ்தான் இந்த செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தானும், சவுதியும் மிகவும் நெருக்கமான நாடுகளாக மாறி இருக்கிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் வந்த சல்மான், பாகிஸ்தானை வைத்து கொண்டாடிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இந்தியா

    ஆனால் இந்தியா

    அதே சமயம் இந்தியா இன்னொருபுறம் ஆசியாவின் இரண்டு முக்கிய நாடுகளின் உதவியை மறைமுகமாக பெற முயற்சி எடுத்து வருகிறது. சீனாவும், ரஷ்யாவும் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக இந்த நாடுகளை திருப்ப இந்தியா முயன்று வருகிறது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Pakistan PM Imran Khan calls Saudi MBS adn UAR Prince, Asks for support.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X