For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. முன்னாள் மனைவியரின் மனங்களையும் வென்று விட்டாரேய்யா இம்ரான் கான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    போர் மூண்டால் அதை கட்டுப்படுத்துவது என் கையிலோ, மோடி கையிலோ இல்லை- இம்ரான்கான்- வீடியோ

    இஸ்லாமாபாத்: இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ய முன்வந்துள்ளதன் மூலம் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இம்ரான் கான் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இப்போது அவரது செயலுக்கு முன்னாள் மனைவியர் இருவரின் பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.

    நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று கதையாகியுள்ளது இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல். சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரக் கொலைக்கு பழி தீர்க்க இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்கியது. இதில் தீவிரவாத முகாம்கள் மிகப் பெரிய அழிவைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இந்தியாவின் நடவடிக்கைகக்கு உலகம் முழுவதும் ஆதரவும் கிடைத்தது. குறிப்பாக சீனாவின் ஆதரவு கிடைத்தது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் இமேஜ் உலக அளவில் உயரும் நிலை உருவானது. ஆனால் இம்ரான் கான் உள்ளே புகுந்து பெயரை தட்டிக் கொண்டு போய் விட்டார்.

    [Read more: உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்.. 48 மணி நேரத்தில் ஒரு நாட்டின் முகத்தை மாற்றிய தமிழர்!]

    இம்ரான் அதிரடி

    இம்ரான் அதிரடி

    பாகிஸ்தானிய படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலையில் இம்ரான் கான் தானாக முன்வந்து இப்படி அறிவித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்தியாவே கூட எதிர்பார்க்கவில்லை. இம்ரான் கானின் செயலால் ஒரே நாளில் அவரது இமேஜ் வெகுவாக உயர்ந்து விட்டது.

    மனங்களை வென்றார்

    மனங்களை வென்றார்

    இரு நாடுகளின் அமைதியை மனதில் கொண்டு நல்லெண்ண நடவடிக்கையாக அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக இம்ரான் கான் பாராளுமன்றத்தில் அறிவித்தபோது அத்தனை பேரும் மேசைகளைத் தட்டி வரவேற்றதும் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த நிலையில் தற்போது இம்ரான் கான் தனது முன்னாள் மனைவியரின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

    ஜெமிமா , ரேஹம் கான்

    ஜெமிமா , ரேஹம் கான்

    ஜெமிமா கோல்ட்ஸ்மித், ரேஹம் கான் ஆகியோர் இம்ரான் கானின் நல்லெண்ண அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக இவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள டிவீட்டுகள் பாகிஸ்தான் மக்களிடையே அதிக அளவில் ரீட்வீட் ஆகி வருகின்றன.

    ரேஹம் எக்சலன்ட்

    ரேஹம் கான் வெளியிட்டுள்ள டிவீட்டில் இம்ரான் கானின் அறிவிப்பை எக்சலன்ட் என்று கூறி வரவேற்றுள்ளார். இவர் இம்ரான் கான் மனைவியாக 1993 ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இருந்தார்.

    கைதட்டி வரவேற்ற ஜெமிமா

    இன்னொரு முன்னாள் மனைவியான ஜெமிமா கோல்ட்ஸ்மித் வெளியிட்டுள்ள டிவிட்டில், கை தட்டும் ஸ்மைலியைப் போட்டு பலே என்று பாராட்டியுள்ளார். ஜெமிமா லண்டனைச் சேர்ந்தவர். இவர் 1995ம் ஆண்டு முதல் 2005 வரை இம்ரானின் மனைவியாக இருந்தவர்.

    ஆக, கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளது!

    English summary
    Jemima Goldsmith and Reham Khan, Former wives of Imran Khan have praised their former Hubby's good will gesture to release IAF Wing Commander Abhinandan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X