For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 ஆண்டாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் மனம் திறந்த இம்ரான் கான்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத் துறை சிறப்பு நடவடிக்கையால் கொன்றது. இந்த நிலையில் அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இம்ரான் கான்

இம்ரான் கான்

எனினும் பாகிஸ்தானோ ஒசாமா பின்லேடன் இருப்பிடம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என கூறிவந்தது. இந்த நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது குறித்து இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒசாமா பின்லேடன்

ஒசாமா பின்லேடன்

பிரதமராகியதும் அமெரிக்காவுக்கு முதல் முறையாக இம்ரான் கான் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் ஒசாமா பின்லேடன் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு அளித்தது.

அமெரிக்கா

அமெரிக்கா

சிஐஏவிடம் கேட்டீர்களென்றால் அவர் இருந்த இடத்தை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல் அளித்தது ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் என்பதை கூறுவார்கள். அமெரிக்காவை எங்களுடைய நட்பு நாடாகத்தான் பார்க்கிறோம்.

பேட்டி

பேட்டி

ஆனால் அந்த நாடோ எங்களை நம்பவில்லை, எங்கள் பகுதியில் புகுந்து குண்டு போட்டு ஒருவரை கொன்றனர் என்று இம்ரான்கான் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

English summary
Imran Khan reveals who helped US intelligence agency to kill Binladen in 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X