For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் இந்தியா.. பாக். பிரதமர் இம்ரான் கானின் அகங்கார பேச்சு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியா அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் அகங்காரமாக கருத்து தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை அடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சீனா போர் விமானங்களையும் படைகளையும் எல்லையில் குவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொடர் பதிவை போட்டுள்ளார்.

அந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்அந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்

இந்தியா

இந்தியா

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்துத்துவா ஆதிக்கம் கொண்ட மோடி அரசு, தனது அகங்காரம் கொண்ட கொள்கைகளாலும் நாசிஸ போக்காலும் இந்தியாவின் அண்டைய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

எல்லை பிரச்சினை

எல்லை பிரச்சினை

குடியுரிமை சட்டம் மூலம் வங்கதேசத்தையும், எல்லை பிரச்சினை மூலம் நேபாளம் மற்றும் சீனாவையும் அச்சுறுத்தி வந்தது. அதேபோல தவறான போர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானையும் அச்சுறுத்தி வந்தது. 4-ஆவது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர்க் குற்றமாக கருதப்படும் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரை சட்டவிரோதமாக இணைந்து கொண்டதன் பிறகு, ஆசாத் காஷ்மீருக்கும் உரிமை கோருகிறது.

இம்ரான் கான்

இம்ரான் கான்

பாசிஸ்ட் மோடி அரசு 2ஆம் தர குடிமக்களாக கருதி சிறுபான்மையினருக்கு மட்டும் அச்சுறுத்தலாக இருந்த வந்த நிலையில் தற்போது பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இம்ரான் கான் அகங்காரமாக பேசியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

தீவிரவாதிகளை ஊக்குவித்ததன் மூலம் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான், அத்துமீறும் சீனாவை தட்டிக் கேட்டதற்காக அண்டை நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தலாக மாறி வருகிறது என இம்ரான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Pakistan PM Imran Khan says that India becomes a threat to Neighbours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X