For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்

Google Oneindia Tamil News

டோக்கியோ: இந்தியா 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வலிமையாகவும் மீள் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளதாக ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

குவாட் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க 2 நாள் சுற்றுப் பயணமான பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.

பயணத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

டெல்லியின் புதிய ஆளுநர் நியமனம் - யார் இந்த வினய் குமார் சக்சேனா? டெல்லியின் புதிய ஆளுநர் நியமனம் - யார் இந்த வினய் குமார் சக்சேனா?

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

அப்போது பேசிய அவர், "இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறையை கட்டமைத்ததில் ஜப்பான் மிக முக்கியமான பங்குதாரராக உள்ளது. மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், டெல்லி - மும்பை தொழில்துறை காரிடார் போன்றவை இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். உலகளவில் நிகழும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன. பருவ நிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

ஜனநாயகம் வலிமையாகி உள்ளது

ஜனநாயகம் வலிமையாகி உள்ளது

பசுமையான எதிர்காலத்தையும், சர்வதேச சூரிய திறன் கூட்டமைப்பை அமைப்பது தொடர்பாக இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மனிதத்தை வன்முறை, பயங்கரவாதம், பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க உலகம் புத்தரின் வழியை பின்பற்ற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் நாம் நம் நாட்டின் ஜனநாயகத்தை வலிமையாகவும் மீண்டு வரும் தன்மை கொண்டதாகவும் மாற்றி இருக்கிறாது.

இந்தியாவில் மக்களின் அரசு

இந்தியாவில் மக்களின் அரசு

நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான வலுவான தூண்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு நபரின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான, ஒருங்கிணைந்த மற்றும் கசிவு தன்மையற்ற நிர்வாகத்தை தரும் அமைப்பை கட்டமைப்பதற்காக நாம் பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவில் உண்மையான அரசாங்கம் மக்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

பாரத் சலோ, பாரத் சே ஜூடோ

பாரத் சலோ, பாரத் சே ஜூடோ

நம் நாட்டின் ஜனநாயகம் வலுபெற்று வருவதற்கான மிக முக்கிய காரணம் இதுதான். ஜப்பானில் வசித்து வரும் இந்தியர்கள் பாரத் சலோ, பாரத் சே ஜூடோ' (இந்தியாவுக்கு வாருங்கள், இந்தியாவுடன் சேருங்கள்) வில் இணைய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 2 நாள் ஜப்பான் பயணத்தில் குவாட் நாடுகளில் தலைவர்களை சந்தித்து, இந்தோ - பசிபிக் பகுதியில் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான பல்வேறு வியூகங்கள் வகுப்பது குறித்து பேச உள்ளார்.

English summary
In 8 years Indian democracy strengthened by BJP - Modi in tokyo
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X