For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏரிக்கரையில் ஒரே பரபரப்பு.. நீந்தி கொண்டிருந்த நபர்.. திடீர்னு வந்த முதலை.. என்னாச்சு?

சுற்றுலா பயணியை முதலை ஒன்று துரத்தும் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

பிரஸ்ஸிலா: சுற்றுலா பயணி ஒருவரை ஏரியில் இருந்த முதலை துரத்தி கொண்டே கடிக்க வந்துள்ளது.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி கொண்டிருக்கிறது.

பொதுவாக முதலைகள் கடித்து உயிரிழப்பது என்பது பெருகி வருகிறது.. இத்தனைக்கும் முதலைகள் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் தான் இருந்து வருகின்றனர்.

எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது? எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது?

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் இந்தோனேசியாவில் நடந்தது.. 44 வயதாகும் ஒரு பெண் தன்னுடைய பண்ணையில், ஒரு முதலையை வைத்து வளர்த்து வந்துள்ளார்..

 பெண் பலி

பெண் பலி

சட்டத்துக்கு புறம்பான வகையில் வளர்க்கப்படும் அந்த முதலைக்கு உணவு கொடுக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேலியை தாண்டி முதலை இருக்கும் பகுதிக்குள் விழுந்துவிட்டார்.. அந்த முதலைக்கு மெரி என்று பெயர்.. 700 கிலோ எடை கொண்டது.. பெண்ணின் வயிற்றின் பெரும்பாலான பகுதியை கடித்து குதறிவிட்டது. அடுத்தநாள் அவரது சடலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

 மரணங்கள்

மரணங்கள்

இப்படித்தான், கடந்த 2016-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ராஜா அம்பாட் தீவுகளில் ஒரு ரஷ்ய சுற்றுலாப்பயணி முதலை கடித்து உயிரிழந்தார்.. உலகம் முழுவதும் முதலைகளால் ஒரு வருடத்துக்கு ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.. இதில் ஆப்ரிக்காவில்தான் அதிகம் உயிரிழப்புகளாம். முதலைகளுக்கு மனித உயிர்கள் கட்டாயம் கிடையாது.. அவைகள் வேண்டுமென்றே தேவையின்றி மனிதர்களை வேட்டையாடுவது இல்லை.. எதிர்பாராமல் நடப்பதுதான் இத்தகைய துர்மரணங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 பரபரப்பு காட்சி

பரபரப்பு காட்சி

இந்நிலையில், ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பிரேசிலில் முதலைகள் இருக்கும் ஏரிக்குள் ஒருவர் சென்றுவிட்டார்.. அந்த முதலையிடம் இருந்து உயிர்பிழைத்து ஓடிவரும் காட்சிதான் திகிலை கூட்டி வருகிறது. பிரேசிலில் பிரபல சுற்றுலா பகுதி கேம்போ கிரான்டே.. இங்கு லாகோ டோ அமோர் என்ற ஏரி உள்ளது.. இங்கு நீண்ட காலமாக முதலைகள் உள்ளன..

ஆபத்து

ஆபத்து

அதனால் யாருமே இந்த ஏரிக்குள் இறங்க கூடாது என்று எச்சரிக்கை அமலில் உள்ளது.. அதனால் சுற்றுலா பயணிகளும் நீருக்குள் இறங்காமல், வெளிப்புறத்தில் இருந்தே ஏரியை ரசித்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி சாயங்காலம் 4.40 அளவில் ஒரு நபர் திடீரென இந்த ஏரிக்குள் குதித்தார்.. அந்த ஏரி இந்த ஆபத்தானது என்று தெரிந்தும் குதித்து, நீச்சலடித்து கொண்டே உள்ளே போனார்..

முதலை

முதலை

கரையில் இருந்து சுமார் 90 அடி தூரம் நீந்தி சென்றிருப்பார், அப்போது திடீரென்று ஏரியின் உள்ளிருந்து முதலை ஒன்று விரட்ட ஆரம்பித்துவிட்டது... இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த நபர், உயிரை காப்பாற்றி கொள்ள, வேக வேகமாக நீந்திக் கொண்டு கரையேற வந்தார்.. ஆனால் அந்த முதலையோ, அவரை பின்னாடியே துரத்தி கொண்டு வந்தது.. நெருங்கி வந்து அவரை கடிக்கவும் ஆரம்பித்தது.. அதற்குள் இந்த நபர் அலறியடித்து கொண்டே, கரைக்கு வந்துசேர்ந்துவிட்டார்...

 பரபரப்பு

பரபரப்பு

அங்கிருந்த வில்யம் கேடனோ என்பவர், இந்த காட்சி அனைத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த ஏரி ஆபத்து என்று தெரியுமாம்.. ஆனால் முதலை இருப்பது இவருக்கு தெரியாதாம்.. இருந்தபோதிலும் முதலை தாக்கியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.. ரத்தம் கொட்டியது.. உயிர்பிழைத்த பதற்றம் அவரது முகத்தில் நீண்ட நேரத்துக்கு தெரிந்து கொண்டே இருந்தது.. ஒரு வித பயத்துடன் கரையில் நின்ற போது, அவர் இங்கு முதலை இருப்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

English summary
In Brazil, Alliator attacked swimmer and terrifying video goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X