For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9.6 கோடி கறுப்பு பந்துகளை மிதக்க விட்டு... ஏரி நீர் ஆவியாகாமல் காக்கும் கலிபோர்னியா

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் நீர் நிலைகளில் இருக்கும் நீர் ஆவியாகி விடாமல் இருக்க புதிய யுக்தி ஒன்று கையாளப் பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது சில்மர் நீர்த்தேக்கம். இங்குள்ள நீர் வேகமாக ஆவியாகி வருகிறது. எனவே, இதனைத் தடுக்கும் வகையில் இந்த நீர்த்தேக்கம் முழுவதும் கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் போடப்பட்டுள்ளன.

இதற்காக 9.6 கோடி கறுப்பு நிற பிளாஸ்டிக் பந்துகள் இந்த நீர்த்தேக்கத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பதே வெளியில் தெரியாத அளவிற்கு கறுப்பு பந்துகளாக காட்சியளிக்கிறது.

In California, Millions of ‘Shade Balls’ Combat a Nagging Drought

இவ்வாறு கறுப்பு பந்துகள் கொட்டப்பட்டிருப்பதன் மூலம் இந்த தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப் படுகிறது. மேலும், அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கப் படுகிறது.

இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 300 காலன் (1135 லிட்டர்) தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்தப் பந்துகள் தடுத்து விடுகின்றனவாம்.

LA just completed a project at the LA Reservoir to save 300 million gallons of water by deploying shade balls on its surface, saving our city over 0 million dollars while keeping our water clean & safe.

Posted by Mayor Eric Garcetti on Monday, August 10, 2015

English summary
Facing a long-term water crisis, officials concerned with preserving a reservoir in Los Angeles hatched a plan: They would combat four years of drought with 96 million plastic balls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X