• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃப்ரீயா லீவு.. ஜாலியா டேட்டிங்.. காதலனோடு ரவுண்டடிக்க செம ஆபர்.. இது சீனத்து கலகல!

|

பெய்ஜிங்: கவர்ச்சி ஆபர்... "டேட்டிங் லீவு எடு.. காதலனை தேர்ந்தெடு" என்று சீன நிறுவனத்தின் அழைப்பு பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பொதுவாக, பெண்கள் இளம் வயதிலேயே கல்யாணம் ஆகி குழந்தை, குட்டி என்று வாழ சிறப்பாக வேண்டும் என்பதுதான் சீனர்களின் விருப்பமே. ஆனால் இப்போதெல்லாம் நிறைய பெண்கள் கல்யாணமே செய்து கொள்வதில்லையாம்.

பல பெண்கள் கல்யாணமே பிடிக்கவில்லை என்று முடிவு செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். மேலும் கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்துவதால் பல பெண்கள் மன அழுத்த நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

30 வயது ஆகிவிட்டது

30 வயது ஆகிவிட்டது

இப்படி, தங்கள் குடும்பம், வாழ்க்கை, சூழ்நிலை, தொழில் போன்றவற்றிலேயே கவனத்தை செலுத்தி 30 வயதாகியும் நிறைய பேர் கல்யாணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். 30 வயதை நெருங்கியும் கல்யாணம் ஆகாத பெண்களை "ஷெங் நு" அதாவது எஞ்சிய பெண்கள் என ரொம்ப கேவலமாக அந்த நாட்டில் பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள். இதனால் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், வேலை செய்யும் திறனும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது.

சலுகைகள்

சலுகைகள்

அதனால் இதுபோன்ற பெண்களுக்கு உதவ சீன அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக், ட்விட்டர் ஸ்டேட்டஸில் "சிங்கிள்" என்று யாரெல்லாம் போட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய சலுகைகளை தர முன்வந்துள்ளது.

டேட்டிங் விடுமுறை

டேட்டிங் விடுமுறை

அதன்படி, 2 நிறுவனங்கள் இதற்கான முதல்படியை எடுத்து வைத்தள்ளன. ஹாங்சௌ என்ற பகுதியில் வரலாற்று பின்னணியிலான சுற்றுலா பூங்காவில்தான் இந்த 2 நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் 30 வயதுகளில் இருக்கும் கல்யாணமாகாத பெண்களுக்கு டேட்டிங் விடுமுறை வழங்குவதாக "சௌத் சைனா போஸ்ட்" தெரிவித்துள்ளது.

பிறப்பு விகிதம்

பிறப்பு விகிதம்

அதாவது பெண்கள் இந்த விடுமுறையை பயன்படுத்தி, தங்களுக்கு பிடித்தமான காதலனை தேடி கொள்ள வேண்டும். மனசுக்கு பிடித்தமான காதலனை தேர்ந்தெடுக்கவே இந்த லீவு அவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நாட்டில் ஆண்களைவிட பெண்களின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தற்போது குறைந்தது 30 மில்லியன் ஆண்கள், பெண்களை விட அதிகமாக உள்ளனர் என்று அந்நாட்டு அரசு புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.

8 நாட்கள் லீவு

8 நாட்கள் லீவு

எனவே இந்த டேட்டிங் விடுமுறையை பயன்படுத்தி காதலனை தேர்ந்தெடுத்து, கல்யாணமும் செய்து கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று சீன அரசு நம்புகிறது. அது மட்டும் இல்லை, இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக லீவு கிடைக்க போவதால் இளம் பெண்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

பெரிசா பலன் இல்லை

பெரிசா பலன் இல்லை

இதுகுறித்து "Leftover Women" and "Betraying Big Brother: The Feminist Awakening in China" என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் லெடா ஹொங் ஃபின்ச்சர் சொன்ன கருத்து என்னவென்றால்: "25 முதல் 30 வயதில் திருமணம் ஆகாமல் இருக்கின்ற பெண்களை முத்திரை குத்துவதற்கு சீன அரசின் திட்டமிட்ட பரப்புரை பிரசாரம் இது என்றும், கல்வி கற்ற பெண்கள் திருமணம் செய்து, பின்னர் குழந்தைகளை பெற்றெடுத்து வாழ்வதற்கு அரசு எடுக்கின்ற முயற்சிகளின் ஒரு பகுதி என்றாலும் பெரிய அளவில் ஒன்றும் இதில் பலன் தராது" என்கிறார்.

சூப்பர் திட்டம்

சூப்பர் திட்டம்

எது எப்படியோ, 25 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஃப்ரீயா லீவு கிடைக்குது.. அதிலும் டேட்டிங் லீவ்.. தன் ஜோடியை தன் இஷ்டத்துக்கு கண்டுபிடிச்சு ஜாலியான வாழ்க்கைக்குள் நுழைய ஒரு நாடே உதவ முன்வந்திருப்பது பாராட்ட வேண்டியதுதான்!!

 
 
 
English summary
The Chinese government has given a holiday to the 25 to 30 years old young unmarried women to choose their lover. People have welcomed this Announcement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X