For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீழே கிடந்த பர்ஸில் பணக் கட்டுக்கள்.. உரியவரிடம் திருப்பிக் கொடுத்த இந்தியரின் நேர்மை!

Google Oneindia Tamil News

துபாய்: அபுதாபியில் இந்தியர் ஒருவர் தெருவில் கிடந்த பர்ஸ் ஒன்றை உரியவரிடம் திருப்பிக் கொடுத்து நேர்மையைப் பறை சாற்றியுள்ளார்.

அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் ரஹீல் பச்சேரி.

இவர் தன்னுடைய ரமலான் சிறப்பு தொழுகைக்காக தனது வீட்டின் அருகில் உள்ள மசூதிக்கு சென்றார்.

வழியில் கிடந்த பர்ஸ்:

சாலை ஓரத்தில் அவர் நடந்து சென்றபோது வழியில் ஒரு பர்ஸ் விழுந்து கிடப்பதைப் பார்த்துள்ளார்.

முக்கிய ஆவணங்கள்:

ஆச்சர்யமடைந்த அவர் அதை பிரித்து பார்த்த போது அதில் நிறைய கிரெடிட் கார்டுகளும், 500 திர்ஹம் நோட்டுகளும், பல முக்கிய ஆவணங்களும் இருந்தன.

4 லட்ச ரூபாய்:

அதிலிருந்த பணத்தின் மதிப்பு 25000 திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 4 லட்சம் ஆகும்.

தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு:

அப்பர்ஸை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணிய பச்சேரி, அதில் இருந்த டிரைவிங் லைசென்ஸில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார்.

இத்தாலிய பெண்ணின் பர்ஸ்:

பர்ஸை தொலைத்த இத்தாலிய பெண்ணான எலிவிரா ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். அதில் இருந்த பணம் தனக்கும், குழந்தைகளுக்கும் ஊருக்கு செல்ல விமான டிக்கெட் வாங்க பணம் வைத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

சிகிச்சை பெறும் கணவர்:

இத்தாலியரான அவர் தனது கணவர் நெஞ்சு வலிக்காக அபுதாபியில் ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்வதற்காக துபாய்க்கு தனது குழந்தைகளுடன் வந்த விபரத்தையும் ரஹீலிடம் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

பெருமைப்பட வைத்த இந்தியர்:

மேலும், இப்பணத்தை நேர்மையாக திருப்பிக் கொடுத்த பச்சேரிக்கு சிறிது பணமும் அளித்துள்ளார். புனிதமான ஒரு தினத்தில் இந்தியரின் இந்த மாண்புகு செயல் இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

English summary
In a heartening show of honesty, an Indian expatriate returned a purse containing 25,000 dirhams (around $6,800) and vital documents to an Italian woman who lost it on the roadside in the United Arab Emirates (UAE), media reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X