For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறும் 635 கிராம் எடை கொண்ட உலகின் குட்டிக் குழந்தைக்கு முதலாவது ஹேப்பி பர்த் டே!

Google Oneindia Tamil News

சுர்ரே, இங்கிலாந்து: வெறும் 635 கிராம் எடையுள்ள, உலகின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடியது.

சர்ரே நகரில் வசித்து வரும் பவுல்-மோரிஸ் தம்பதிக்குப் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தையான ஜெட் மோரிஸ் சமீபத்தில் தனது பெற்றோருடன் தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளான்.

incredible survival of baby born at just 25 weeks

எல்லா கர்ப்பிணிப் பெண்களையும் போலவே மோரிஸ், கருவுற்ற நாள் முதல் தன் குழந்தையைப் பற்றிய கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கருத்தரித்த சில வாரத்திலேயே வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது கர்ப்பப்பையிலிருந்த தண்ணீர் வெளியேறிவிட்டதாகவும் உடனடியாக கருக்கலைப்பு செய்ய வேண்டுமென்றும் மோரிஸை மருத்துவர்கள் வலியுறுத்தினர். மோரிஸின் அன்பு கொண்ட தாயுள்ளமோ குழந்தையைக் கொல்ல பிடிவாதமாக மறுத்து விட்டது. அந்தப் பிடிவாதமும் அளவற்ற அன்பும்தான் கர்ப்பப் பையிலிருந்த தண்ணீர் வெளியேறிய போதிலும், சில வாரங்கள் கழித்து குழந்தையைப் பிரசவிக்க வைத்தது.

பிறந்த குழந்தையைப் பார்த்ததும் மோரிஸுக்கும் அவரது கணவருக்கும் பயங்கர ஆச்சர்யம். காரணம் பிறந்த குழந்தை பவுலின் கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறியதாக இருந்ததுதான். சுமார் 635 கிராம் எடை கொண்ட அந்த குழந்தைக்கு ஜெட் மோரிஸ் என்று பெயரிட்டு அன்புடன் வளர்க்கத் தொடங்கினர்.

பிறக்கும் போது குழந்தைக்கு மஞ்சள் காமாலை மற்றும் நுரையீரல் கோளாறு இருந்தாலும், மோரிஸ் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறான் என்றும் அவனது தாயார் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

English summary
A baby who was born at just 25 weeks has gone against many doctors' predictions and lived to see his first birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X