For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எபோலாவிலிருந்து மீண்டவர்கள் பாதுகாப்பான முறையில் இடைவிடாமல் உறவு கொள்ள ஆலோசனை

Google Oneindia Tamil News

மான்ரோவியா, லைபீரியா: எபோலாவிலிருந்து மீண்டவர்கள் 3 மாத காலத்துக்கு, பாதுகாப்பான முறையில் தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டு வர வேண்டும் என்று லைபீரிய அரசு ஆலோசனை கூறியுள்ளது.

எபோலா வைரஸானது, ஆண்களின் விந்தணுவில் குறைந்தது 82 நாட்களுக்காவது இருக்கும் என்பதால் சோதனைக்காக தொடர் செக்ஸில் ஈடுபடுமாறு லைபீரிய அரசு அறிவுறுத்தியுள்ளது. எபோலா பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் எத்தனை நாட்களுக்கு இருக்கிறது என்பதை அறியவும் இந்த தொடர் செக்ஸ் உதவுமாம்.

முதலில், ஆண்கள் செக்ஸில் ஈடுபடக் கூடாது என்று கூறப்பட்டது. இருப்பினும் தற்போது பாதுகாப்பான முறையில் செக்ஸில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 3 மாதத்திற்காவது தொடர்ந்து செக்ஸில் ஈடுபட வேண்டுமாம்.

Indefinite Safe Sex Urged for Ebola Survivors

இதேபோல எபோலா பாதிப்புக்குள்ளான பிற நாட்டினருக்கும் கூட அறிவுறுத்தல்களை டாக்டர்கள் வழங்கத் தொடங்கியுள்ளனராம்.

இருப்பினும் செக்ஸில் ஈடுபடும்போது மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதுபோல செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

லைபீரியாவி்தான் எபோலா பாதிப்பு அதிகமாகும். இருப்பினும் அங்கு தற்போது எபோலா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 3 வாரமாக புதிய எபோலா பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. லைபீரியாவில் மட்டும் எபோலாவுக்கு 4000 பேர் பலியாகியுள்ளனர்.

English summary
The Liberian government recommended on Saturday that survivors of Ebola practice safe sex indefinitely, until more information can be collected on the length of time the virus might remain present in body fluids, including semen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X