For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா. சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

ஜெருசலேம் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா உட்பட 127 நாடுகள் வாக்களித்துள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜெருசலேம் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 127 நாடுகள் வாக்களித்துள்ளன.

சர்ச்சைக்குரிய ஜெருசலேமை தமது நாட்டின் தலைநகராக பிரகடனப்படுத்தியது இஸ்ரேல். இதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

India, 127 countries vote against US’ move on Jerusalem

ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் டெல் அவிவ்- நகரத்தில் உள்ள தமது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவோம் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜெருசலேம் ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா.வின் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக- அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா உட்பட 127 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல் உட்பட 8 நாடுகள்தான் அமெரிக்காவை ஆதரித்தன.

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தால் நிதி உதவியை ரத்து செய்வோம் என மிரட்டிப் பார்த்தார் டிரம்ப். ஆனால் உலக நாடுகள் டிரம்ப்பின் மிரட்டலை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India joined 127 countries in the United Nations General Assembly to vote against a US move to recognise Israel as the capital of Jerusalem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X