For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் அதிகாரிகள் இருக்க கூடாது.. புதிய கண்டிசன் போட்ட இந்தியா.. குல்பூஷண் வழக்கில் சிக்கல்!

இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை சந்திக்கும் சமயத்தில் அங்கு பாகிஸ்தான் அதிகாரிகள் யாரும் இருக்க கூடாது என்று இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை சந்திக்கும் சமயத்தில் அங்கு பாகிஸ்தான் அதிகாரிகள் யாரும் இருக்க கூடாது என்று இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரகத்தின் உதவியை பெறுவதற்கும், தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று பாகிஸ்தான் வெளியிட்டது.

இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்து பின் பணி ஓய்வு பெற்றவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் சுற்றுலா சென்று அங்கு இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரா அமைப்பு சார்பாக இவர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.

ஷாக்.. வாழவே விட மாட்டீங்களா.. பெற்ற தகப்பனை கம்பாலேயே அடித்து கொன்ற மகள்.. காதலனும் உடந்தை!ஷாக்.. வாழவே விட மாட்டீங்களா.. பெற்ற தகப்பனை கம்பாலேயே அடித்து கொன்ற மகள்.. காதலனும் உடந்தை!

என்ன முயற்சி

என்ன முயற்சி

இவரை இந்தியா கொண்டு வர பல வருடங்களாக முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2018 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக வழக்கு தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சர்வதேச நீதிமன்றம்

சர்வதேச நீதிமன்றம்

இந்த வழக்கில் கடந்த ஜூலை 17ம் தேதி சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதை நிறைவேற்ற கூடாது என்றது. அதோடு இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷண் ஜாதவுக்கு உரிமை உள்ளதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது.

முடிவு

முடிவு

இந்த நிலையில் தற்போது இந்திய தூதரகத்தின் உதவியை பெறுவதற்கும், தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கும் குல்பூஷண் ஜாதவுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இன்று குல்பூஷண் ஜாதவ் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் நேற்று கூறியது.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

இந்த நிலையில் இந்தியா தரப்பில் இந்த சந்திப்பில் சிலமாற்றங்களை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் அரசின் வெளியுறவு விதிகளுக்கு உட்பட்டே இந்த சந்திப்பு நடைபெறும் என்று அந்நாட்டு அரசு கூறியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

என்ன எதிர்ப்பு

என்ன எதிர்ப்பு

அதன்படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை சந்திக்கும் சமயத்தில் அங்கு பாகிஸ்தான் அதிகாரிகள் யாரும் இருக்க கூடாது. வியன்னா ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை கைதிகள் சந்திக்கும் பொழுது, எதிரி நாட்டு அதிகாரிகள் யாரும் அங்கு இருக்க கூடாது என்று இந்தியா கூறியுள்ளது. இதனால் குல்பூஷண் இந்திய அதிகாரிகளை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
India asks for the environmental free situation to meet Kulbhushan Jadhav in Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X