For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை.. ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு.. பதற்றம்!

பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Indian Air Force: தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல்- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று இருக்கிறார்கள்.

    பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

    India attacks Pakistan: Pak. Foreign Ministry holds an urgent meeting with Army officials

    இதில் மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    அதேபோல் இதில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று இருக்கிறார்கள். இந்தியாவின் தாக்குதலை அடுத்து இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இந்த தாக்குதல் குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    India attacks Pakistan: Pak. Foreign Ministry holds an urgent meeting with Army officials after India's attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X