For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா.வில் சீனாவை வெச்சு செஞ்ச இந்தியா! பொருளாதார, சமூக கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அமோக வெற்றி!

Google Oneindia Tamil News

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பான ECOSOC-ன் உறுப்பினர் தேர்தலில் சீனாவை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பு ECOSOC. இதன் பெண்கள் நிலை தொடர்பான ஐ.நா. அமைப்புதான் UNCSW.

1995-ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதன் 25-வது ஆண்டு விழா. UNCSW அமைப்பானது ஐநாவின் முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும்.

நச்சரிக்கும் எதிர்க்கட்சிகள்.. லடாக் குறித்து இன்று லோக்சபாவில் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல்!நச்சரிக்கும் எதிர்க்கட்சிகள்.. லடாக் குறித்து இன்று லோக்சபாவில் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல்!

சீனா படுதோல்வி

சீனா படுதோல்வி

பாலின சமத்துவம், பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வருகிறது UNCSW. இதன் உறுப்பினர் இடத்துக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவை போட்டியிட்டன. வாக்குச் சீட்டு முறையிலான தேர்தலில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் 54 இடங்களைப் பெற்று உறுப்பினர்களாகின. சீனா தோல்வியைத் தழுவியது.

திருமூர்த்தி ட்வீட்

திருமூர்த்தி ட்வீட்

இது தொடர்பாக ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கவுரம்மிக்க ECOSOC உறுப்பினராக இந்தியா வென்றுள்ளது! இந்தியா UNCSW-ன் உறுப்பினராகி உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அத்தனை நாடுகளுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

UNSC தேர்தல்

UNSC தேர்தல்

இதற்கு முன்னதாக ஜூன் 18-ந் தேதியன்று ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா அமோக ஆதரவைப் பெற்று வென்றது. UNSC நிரந்தரமற்ற உறுப்பு நாடாவதற்கு தேவை 125 நாடுகளின் ஆதரவுதான். ஆனால் இந்தியாவுக்கு 184 இடங்கள் கிடைத்திருந்தன. 8-வது முறையாக UNSC-ன் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடானது இந்தியா.

சாதித்த தமிழர் திருமூர்த்தி

சாதித்த தமிழர் திருமூர்த்தி

அந்த வெற்றிக்கும் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தியின் இடைவிடாத லாபிதான். சென்னையைச் சேர்ந்த தமிழரான திருமூர்த்தியின் தொடர் முயற்சிகளால் ஐ.நா. இந்தியாவில் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. ஐநாவின் இந்த CSW அல்லது UNCSW-ல் 2025-ம் ஆண்டு வரை அதாவது 4 ஆண்டுகள் இந்தியா உறுப்பினராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India has been elected as a member of the United Nation’s Commission on Status of Women (UNCSW), a body of the Economic and Social Council (ECOSOC).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X