For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய தேசிய கீதம் பாடியபோது எழுந்திருக்காத ஜெர்மனி அதிபர்.. உருவான சர்ச்சை.. உண்மை இதுதான்!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் இந்த செயல் இணையம் முழுக்க சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது .

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு நடத்தினார். இதில் இரு நாடுகள் இடையேயும் பல தரப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பாதுகாப்பு துறை, மருத்துவம், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பல ஒப்பந்தங்கள் இரண்டு நாட்டிற்கு இடையில் இன்று கையெழுத்தானது.

அரசு சந்திப்பு

இந்த நிலையில் இன்று நடந்த அரசு முறை சந்திப்பில் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. அதை தொடர்ந்து ஜெர்மன் தேசிய கீதமும் பாடப்பட்டது. இரண்டிற்கும் ஏஞ்சலா மெர்கெல் எழாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகே யாரும் அப்போது இல்லை.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

அவரின் இந்த செயல் கொஞ்சம் சர்ச்சையானது. இணையம் முழுக்க பலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். இந்திய தேசிய கீதத்திற்கு அவர் ஏன் எழுந்து மரியாதை செலுத்தவில்லை. ஏன் அதிகாரிகள் இதை கேள்வி கேட்கவில்லை என்று பலர் சர்ச்சையாக்கினார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த நிலையில் ஏஞ்சலா மெர்கெல் ஏன் எழவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏஞ்சலா மெர்கெல் வயது முதிர்ச்சி காரணமாக தனியாக எழுந்து நிற்க முடியாது. அவர் நிற்க வேண்டும் என்றால் அருகே ஒருவர் அவரை பிடித்து இருக்க வேண்டும்.

விளக்கம் அளித்தனர்

விளக்கம் அளித்தனர்

இதனால் அவர் தேசிய கீதத்தின் போது நிற்காமல் இருக்க அனுமதி கேட்டு வாங்கி இருக்கிறார். அவரின் உடல்நிலை காரணம் காட்டி இந்திய தரப்பும் அவருக்கும் இந்த அனுமதியை வழங்கி உள்ளது. அவருடைய இந்த சந்திப்பில் இதேபோல் முக்கிய பல விதிகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
India changed the protocol to allow German Chancellor Angela Merkel sit during National anthem - Here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X