For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் மொத்த பொறுப்புக்கும்..காரணம்...இந்தியாதான்... சீனா அதிரடி!!

Google Oneindia Tamil News

பீஜிங்: எல்லையில் மொத்த பொறுப்பும் இந்தியாவின் பக்கமே இருக்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வீ ஃபெங்கி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மாஸ்கோவில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    India-தான் காரணம்! 1 Inch கூட விட்டுத்தரமாட்டோம்-China அறிக்கை | Oneindia Tamil

    எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழுவிடம், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வீ ஃபெங்கி தெரிவித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் தற்போதைய பதட்டத்தின் காரணமும் உண்மையும் மிகத் தெளிவாக உள்ளன, மேலும் முழுபொறுப்பும் இந்தியா பக்கமே உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

    இந்தியா- சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது.. அமெரிக்கா உதவத் தயார்.. வலிய வம்பிழுக்கும் டிரம்ப்இந்தியா- சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது.. அமெரிக்கா உதவத் தயார்.. வலிய வம்பிழுக்கும் டிரம்ப்

    சந்திப்பு

    சந்திப்பு

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வீ ஃபெங்கி கலந்து கொண்டுள்ளனர். எல்லையில் நடக்கும் பதற்றம் குறித்து நேற்று உயர்மட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு இருநாட்டு அமைச்சர்கள் முன்பு கூடியது. இதில், இருநாட்டு எல்லை பதற்றம் குறித்து பேசப்பட்டது.

    கல்வான்

    கல்வான்

    அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க சீன அமைச்சர் பெங்கி நேரம் கேட்டு இருந்ததாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில், நேற்று இந்த சந்திப்பு நடந்தது. கடந்த ஜூன் மாதம் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சீன வீரர்கள் கொன்றனர் இதையடுத்துத் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போதும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாடுகளும் ராணுவ தளவாடங்களை குவித்து போர் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.

    நிலத்தை இழக்கமாட்டோம்

    நிலத்தை இழக்கமாட்டோம்

    ''சீனாவின் நிலப்பரப்பை சிறிதும் இழக்க முடியாது, சீன ராணுவம் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முழு உறுதி, திறமை, நம்பிக்கையும் கொண்டது. இருநாட்டு தலைவர்கள் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி தலைமையில் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை இரு தரப்பினரும் ஆர்வத்துடன் செயல்படுத்த வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என்று நேற்றைய சந்திப்பில் சீனா வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா பின் வாங்குதல்

    இந்தியா பின் வாங்குதல்

    இரு தரப்பிலும் ஏற்பட்டு இருக்கும் தொடர்ச்சியான உடன்படிக்கைகளுக்கு இந்திய தரப்பு கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும். தற்போது எல்லையில் கோபத்தை மூட்டும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கி இருக்கிறது. இந்த நடவடிக்கைகளில் இருந்து இந்தியா பின் வாங்க வேண்டும் தவறான எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்றிணைந்து

    ஒன்றிணைந்து

    தற்போதைய சூழ்நிலையை விரைவாக சுமூகமாக்குவதற்கும், சீன-இந்திய எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கும், ஒன்றிணைந்து செயல்பட முன் வரவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சீனா

    சீனா

    இதையடுத்து கருத்து தெரிவித்து இருக்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இரு தரப்பினருக்கும் இடையிலான ராணுவ மற்றும் ராஜதந்திரத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆலோசனை மற்றும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் இந்த சிக்கலை தீர்க்க சீனா முன் வரவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    India China border: Beijing says responsibility lies entirely with India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X