For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-சீனா போட்டி ஆசியாவிற்கு நல்லதல்ல: தலாய் லாமா

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா சீனா போட்டி போட்டுக் கொள்வது ஆசியாவிற்கு மட்டுமல்ல, திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல எனத் தெரிவித்துள்ளார் புத்தமதத் தலைவரான தலாய்லாமா.

இருவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் புத்தமதத் தலைவரான தலாய் லாமா. அங்கு செய்தியார்களிடம் பேசுகையில் இ்ப்படித் தெரிவித்தார் லாமா.

தலாய் லாமாாவின் பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

போட்டி நல்லது

போட்டி நல்லது

இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொள்வது ஆசிய கண்டத்திற்கு மட்டுமின்றி திபெத்தியர்களுக்கும் நல்லதல்ல. பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான நல்ல உறவுகள், சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம். அதேபோல் கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும்.

ஸி ஜின்பிங் தைரியமானவர்

ஸி ஜின்பிங் தைரியமானவர்

தற்போது சீன அதிபராக இருக்கும் ஸி ஜின்பிங், ஊழலை எதிர்த்து தைரியத்துடன் சிறப்பாக செயலாற்றக் கூடியவர். ஆனால் தணிக்கை முறை பரவலாக நடைபெற வேண்டும்.

உண்மையான வளர்ச்சி கிராமங்களில்தான் வேண்டும்

உண்மையான வளர்ச்சி கிராமங்களில்தான் வேண்டும்

சீனாவில் உண்மையான வளர்ச்சி என்பது, கிராமப்புற பகுதிகளில்தான் ஏற்பட வேண்டும். இதன் பொருள் நகரங்களை உருவாக்குவது அன்று.

பெய்ஜிங் பெரும் நகரமாக உருவெடுக்கும்

பெய்ஜிங் பெரும் நகரமாக உருவெடுக்கும்

மேலும், சீன நீதித்துறை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் பெரிதும் பயன்பெறுவர். சீனாவின் பெய்ஜிங் நகரம் மிகப்பெரிய பொருளாதார நகரமாக உருவெடுக்கும்.

மனித உயிர்களுக்கு மதிப்பில்லையே

மனித உயிர்களுக்கு மதிப்பில்லையே

சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை ஆகியவையே அமெரிக்காவின் கொள்கைகளாகும். ஆனால் ஆப்பிரிக்கா, சிரியா போன்ற நாடுகளில் நீதிக்கொள்கைகள் இல்லாத காரணத்தினால் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

நீதிக்கொள்கை இல்லாவிட்டால் வளம் இல்லை

நீதிக்கொள்கை இல்லாவிட்டால் வளம் இல்லை

நீதிக்கொள்கையினை இழந்துவிட்டால் எந்தவொரு நாட்டிற்கும் வளமான எதிர்காலம் இல்லை.

நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்

நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்

மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் காலநிலைகள் வேறுபடுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தால் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடதுருவம் உருகுவதாக கூறுகின்றனர். நாம் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Tibetan spiritual leader the Dalai Lama feels the India-China 'rivalry' is neither good for Asia nor for the cause of the Tibetans and says there is real room to develop trust between the two neighbours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X