For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாள் குறித்த ராணுவம்.. லடாக் எல்லையில் "லெப்டினன்ட் ஜெனரல்" அதிகாரிகள் மீட்டிங்.. முக்கிய திருப்பம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் உடன் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.பல முக்கியமான விஷயங்கள் இதில் பேசப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்தியா சீனா எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லடாக் எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் படைகளை குவித்து வருகிறது. இதுவரை சமாதானம் செய்வதற்காக நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்விஅடைந்துவிட்டன.

தற்போது கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவமும் கொஞ்சம் பின்வாங்கி உள்ளதால் அங்கு லேசாக பதற்றம் தணிந்து உள்ளது. ஆனால் மற்ற இடங்களில் எப்போதும் படைகள் தீவிரமாக குவிக்கப்பட்டு உள்ளது.

யாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி? இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம்யாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி? இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம்

முடியவில்லை

முடியவில்லை

கல்வான் பகுதியில் சீன ராணுவம் 2 கிமீ பின்னோக்கி சென்று, படைகளை திரும்ப பெற்றுள்ளது. ஆனால் இன்னும் லடாக் எல்லையில் இருக்கும் பாங்காங் திசோ நதி பகுதியில் பதற்றம் தணியவில்லை. அங்கு இரண்டு நாட்டு ராணுவ குழுக்கள் எப்போதும் போல தீவிரமாக படைகளை குவித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் சீனாவை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் உடன் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

 எப்போது மீட்டிங்

எப்போது மீட்டிங்

வரும் ஜூன் 6ம் தேதி இந்த மீட்டிங் நடக்க உள்ளது. பல முக்கியமான விஷயங்கள் இதில் பேசப்படும் என்று கூறுகிறார்கள். இந்த பாங்காங் திசோ நதி பகுதியில் மொத்தம் எட்டு பிரிவுகள் உள்ளது. இதை ராணுவ வீரர்கள் பிங்கர்கள் (finger) என்று அழைக்கிறார்கள். இந்த 8 பிங்கர்களில் முதல் 4 பிங்கர்கள் இந்தியா மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. கடைசி நான்கு பிங்கர்கள் சீனா மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

 இந்தியா உரிமை

இந்தியா உரிமை

ஆனால் இந்த 8 பிங்கர்களும் எங்களுக்குத்தான் சொந்தம் என்று இந்தியா கூறி வருகிறது. இதற்காக இந்தியா 4 வது பிங்கர் பகுதியில் படைகளை குவித்து வருகிறது. இந்த கடைசி 4 பிங்கர்கள்தான் தற்போது பிரச்னைக்கு காரணம் ஆகும். இதை யார் கைப்பற்றுவது என்பதுதான் தற்போது முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. இங்குதான் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது.

 சீனாவின் செயல்

சீனாவின் செயல்

சீனா இங்குதான் படைகளை குவித்து வருகிறது. கடந்த மே 5ம் தேதி மற்றும் மே 18ம் தேதி இரண்டு நாடுகளும் இங்குதான் கடுமையான மோதலில் ஈடுப்பட்டது . அங்கு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. வெள்ளை கொடி காட்டும் முறை கூட தோல்வியில் முடிந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான மீட்டிங்கும் தோல்வியில் முடிந்துள்ளது.

 புதிய திருப்பம்

புதிய திருப்பம்

இதனால் தற்போது சீனாவை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் உடன் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் இடையே மீட்டிங் நடப்பது இதுதான் முதல்முறை ஆகும். இதில் பல முக்கிய முடிவு எடுக்கப்படும். இதற்காக அங்கு தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Recommended Video

    மெளனம் கலைத்த ரஷ்யா... India - China மோதல் குறித்து கருத்து
     என்ன முடிவு

    என்ன முடிவு

    இதில்சீனாவின் படைகளை வாபஸ் வாங்க இந்தியா கோரிக்கை வைக்க உள்ளது. இந்தியா 5-8 பிங்கர்கள் பகுதியில் இருந்து சீன ராணுவத்தை வெளியேற கோரிக்கை வைக்கும். படைகளை திரும்ப பெற கோரிக்கை வைக்கும் என்று கூறுகிறார்கள். இதில் செய்யப்படும் ஒப்பந்தம் மூலம் சீன - இந்திய பிரச்சனை முடிவிற்கு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    Photo Courtesy : The Print

    English summary
    India - China Standoff: Lt Gen-rank army officers will talk on Ladakh to solve border issues on June 6.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X