For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. இணைய மறுக்கும் இந்தியா.. தாய்லாந்தில் மோடி திடுக் முடிவு!

உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான ஆர்சிஇபியில் இணைய வேண்டாம் என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வர்த்தக ஒப்பந்ததில் இணைய மறுக்கும் இந்தியா.. மோடி முடிவு!

    பாங்காக்: உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான ஆர்சிஇபியில் இணைய வேண்டாம் என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது. தாய்லாந்தில் பிரதமர் மோடி இந்த முடிவை வெளிப்படுத்தினார்.

    பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி ஏசியான் 16வது மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார்.

    அதேபோல் ஆர்சிஇபி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    எப்படி

    எப்படி

    ஆர்சிஇபி என்பது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு அமைப்பு ஆகும் . இதில் ஏசியான் குழுவில் உள்ளஆசியாவை சேர்ந்த சிறிய பத்து நாடுகள் மற்றும் 6 வர்த்தக ஒப்பந்த நாடுகள் உள்ளது. தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து, மியான்மர், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய 16 நாடுகள் இதில் உள்ளது.

    ஆர்சிஇபி எப்படி

    ஆர்சிஇபி எப்படி

    ஆர்சிஇபிதான் உலகில் மிகப்பெரிய இலவச வர்த்தக ஒப்பந்த குழுவாக இருக்க போகிறது. 2012ல் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதில் சீனா, இந்தியா இருப்பதால் இதன் ஜிடிபி மதிப்பு மிகவும் அதிகம். அதன்படி உலகில் 39% ஜிடிபியை இந்த 16 நாடுகள்தான் கொண்டு இருக்கும்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் உலக பொருளாதாரத்தில் 49.5 டிரில்லியன் டாலர் இந்த நாடுகளிடம்தான் இருக்கிறது. அதனால் உலகை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய குழுவாக ஆர்சிஇபி உருவெடுக்க முடியும். இந்தியா இதில் இணைவதன் மூலம் மிகப்பெரிய பலன்களை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த குழு 29 கூட்டங்களை நடத்தி உள்ளது.

    மோடி சென்றார்

    மோடி சென்றார்

    இதன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். ஆலோசனையின் முடிவில், உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த குழுவான ஆர்சிஇபியில் இணைய வேண்டாம் என்ற முடிவை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை, இந்த குழுவின் எங்கள் குரலுக்குள் மதிப்பில்லை என்று இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது என்கிறார்கள்.

    English summary
    India decides not to join mega Asian trade deal named RCEP after clash with countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X