For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங்?.. சீன ஊடகம் வெளியிட்ட செய்தி.. இந்தியா அதிரடி மறுப்பு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே உடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்த போவதில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது .

Recommended Video

    India-China Border பிரச்சினை பற்றி பேசாத Rajnath Singh | Rajnath Singh Russia Visit

    ரஷ்யாவில் இன்று மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது. ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை ரஷ்யா வீழ்த்தியது.

    இந்த போர் நடந்து 75 வருடங்கள் முடிந்துவிட்டது. இதில் 20 மில்லியன் ரஷ்ய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களை நினைவு கூறும் விதமான அங்கு இன்று ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.

    இந்தியா, சீனா மட்டுமல்ல.. 11 நாடுகள் வருகிறது.. ரஷ்யாவில் இன்று மாபெரும் அணிவகுப்பு.. புடின் பிளான்!இந்தியா, சீனா மட்டுமல்ல.. 11 நாடுகள் வருகிறது.. ரஷ்யாவில் இன்று மாபெரும் அணிவகுப்பு.. புடின் பிளான்!

    ரஷ்யா எப்படி

    ரஷ்யா எப்படி

    ரஷ்யாவின் இந்த ராணுவ அணிவகுப்பிற்கு சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சரும் வருகிறார். சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இதில் பங்கேற்கிறார். அதேபோல் 11 நாடுகளை சேர்த்து அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் இன்று நடக்கும் விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்திக்கிறார் என்று செய்திகள் வந்தது.

    இன்று சந்திப்பு

    இன்று சந்திப்பு

    அதாவது இவர்கள் இருவரும் இன்று சந்திக்க போகிறார்கள், இரண்டு நாட்டு பிரச்சனை குறித்தும் உறவு குறித்தும் பேசுவார்கள். கல்வான் சண்டைக்கு பிறகு இது மிக முக்கியமான சந்திப்பாக இருக்க போகிறது என்று சீனாவின் செய்தி ஊடகமாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி நிறுவனம் சீனாவின் அரசுக்கு கட்டுப்பட்டு இயங்கும் நிறுவனம் ஆகும் .

    என்ன பதில்

    என்ன பதில்

    இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்த போவதில்லை. அவர் சீன அதிகாரிகள் யாரையும் சந்திக்க போவதில்லை. அப்படி எந்த விதமான திட்டங்களும் அரசிடம் இல்லை. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    நேற்று மீட்டிங்

    நேற்று மீட்டிங்

    இந்த நிலையில் நேற்று இந்தியா - சீனா - ரஷ்யா ஆகிய நாடுகள் இடையே மீட்டிங் நடந்தது. மூன்று நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். கல்வான் தாக்குதல் தொடர்பாக இதில் எந்த விதமான ஆலோசனையும் நடக்கவில்லை என்கிறார்கள்.

    English summary
    Russia military parade: India denies the meeting between Rajnath Singh and his Chinese counterpart.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X