For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவிடம் இருந்து பி-18 ரக கண்காணிப்பு விமானம் வாங்க இந்தியா திட்டம்

அமெரிக்காவில் இருந்து வரும் 2020-ம் ஆண்டு முதல் நான்கு பி-81 ரக கண்காணிப்பு விமானங்களை கடற்படைக்கு வாங்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க சியாட்டி நகர போயிங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சியாட்டில்: கடற்படைக்கு பி-81 ரக மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு விமானங்களை வரும் 2020- ஆம் ஆண்டு முதல் வாங்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க சியாட்டில் நகர போயிங் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வடஅமெரிக்காவிற்கு வடமேற்கில் அமைந்துள்ள துறைமுக நகரம் சியாட்டி. இங்கு உயரிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கிருந்து 4 பி-81 ரக கண்காணிப்பு விமானங்களை வாங்க இந்தியா முன் வந்துள்ளதாக அந்நகர போயிங் நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதில் ஒன்றினை வரும் 2020-ம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியாவுக்கு வழங்க இருப்பதாக மார்க் ஜோர்டான் என்ற என்ஜீனியர் தெரிவித்து இருக்கிறார்.

India to get 4 P-8I reconnaissance aircraft starting 2020

எஞ்சிய விமானங்கள் வரும் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல நவீன விமானங்களை இந்திய தரப்பில் கோரியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்திய கடற்படையில் ஏற்கனவே 8 விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 4 கண்காணிப்பு விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா கண்காணிப்பை அதிகரித்துள்ள நிலையில் மேலும் 4 நவீன கண்காணிப்பு விமானங்களை வாங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

அந்தமான் தீவுப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நவீன ரக விமானத்தை வாங்க இந்தியா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் இருந்து 32 வீரர்களுடன் சென்ற விமானம் மாயமான போது கண்காணிப்பு விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

English summary
Seattle: The Indian Navy will get four P-8I advanced maritime reconnaissance aircraft with upgrades starting July 2020, a senior Boeing official said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X