For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை கற்றுக்கொடுத்த வித்தை.. சீனாவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் இந்தியா.. பை பை பெய்ஜிங்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவை எல்லை ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் வென்ற இந்தியா தற்போது சீனாவின் பொருளாதார அஸ்திவாரத்திலேயே கை வைக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    Chennai காட்டிய வழி... China- ன் அஸ்திவாரத்தையே உலுக்கும் India

    இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை தற்போது சுமுகமாக முடியும் நிலையில் இருக்கிறது. போர் எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலமே எல்லை பிரச்சனையை இந்தியா தீர்த்து உள்ளது.

    இதன் மூலம் லடாக் எல்லையில் இருக்கும் கல்வான், டெப்சாங், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங் ஆகிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இறுதி கட்டமாக படைகளை வாபஸ் வாங்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரிசீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இன்னொரு பக்கம் இந்தியா சீனாவிற்கு பொருளாதார ரீதியாக செக் வைக்க தொடங்கி உள்ளது.எல்லையில் என்னதான் அமைதி திரும்பினாலும் இரண்டு நாட்டு உறவு என்பது முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது.இனி நட்பு என்பது சாத்தியம் இல்லை என்பதால் இந்தியா சீனாவிடம் அடித்து ஆட தொடங்கி உள்ளது. அந்த வகையில் சீனா தனது சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பி இருக்கும் பொருளாதார அஸ்திவாரத்தை இந்தியா அசைக்க தொடங்கி உள்ளது.

    பல நாள் எதிர்பார்ப்பு

    பல நாள் எதிர்பார்ப்பு

    பல நாட்களாக சீனா எதிர்பார்த்த வர்த்தக மோதல்தான் இப்போது தொடங்கி உள்ளது. அதன்படி சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது . கடந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா - சீனா இடையே பொருளாதார மோதல் நடந்து வந்தது. இந்த வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆசிய நாடுகள்

    ஆசிய நாடுகள்

    தற்போது உள்ளது பிரச்சனை காரணமாக இந்த வெளியேற்றம் வேகம் எடுத்துள்ளது. இதனால் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அமெரிக்க நிறுவனங்கள் வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீடு செய்ய விரும்பியது. அதேபோல் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கூட முதலீடு செய்ய இந்த நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்தியாவை அந்த நிறுவனங்கள் தங்கள் லிஸ்டில் வைக்காமல் போனதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டது. முதல் காரணம் இந்திய பொருளாதார சரிவு. இன்னொரு காரணம் பல்வேறு மாநில அரசுகள் வெளிநாட்டு முதலீட்டுக்கு எதிராக வைத்து இருக்கும் சில சட்டங்கள். இன்னொரு காரணம் இந்தியா - சீனா மோதல் பெரிதாக வெடித்தால் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கும் என்று அந்த நிறுவனங்கள் அஞ்சியது. ஆனால் இப்போது இந்தியா இந்த அச்சத்தை போக்கி உள்ளது.

    சென்னை காட்டிய வழி

    சென்னை காட்டிய வழி

    சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தற்போது திடீரென்று இந்தியா மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதற்கு சென்னைதான் காரணம் என்றும் கூட கூறலாம். ஆம் சென்னைதான் இந்த பொருளாதார புரட்சிக்கு விதை போட்டுள்ளது என்றும் கூறலாம். சீனாவில் இருந்து அமெரிக்கா நிறுவனங்கள் வெளியே செல்கிறது என்று தெரிந்தவுடன் அந்த நிறுவனங்கள் சென்னை நோக்கி இழுக்க தமிழக முதல்வர் பழனிசாமி முயன்றார்.

    தமிழக முதல்வர் திட்டம்

    தமிழக முதல்வர் திட்டம்

    அதன்படி ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். தினமும் நிறைய நிறுவனங்களுக்கு கடிதங்கள் பறந்தது. சென்னையில் இந்த நிறுவனங்களை தொடங்க வாடகை, மின் கட்டணம் வரை நிறைய சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்தது. இதனால் தற்போது ஆப்பிள் நிறுவனம் சென்னையில் முதலீடு செய்ய ஆலோசனைகளை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் சென்னையில் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.

    எவ்வளவு முதலீடு

    எவ்வளவு முதலீடு

    சென்னையில் ஏற்கனவே ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. தற்போது சென்னையில் ஃபாக்சான் நிறுவனம் கூடுதலாக 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. சீனாவில் மொத்தமாக முதலீட்டை நிறுத்திவிட்டு மொத்தமாக அதை அப்படியே சென்னை நோக்கி திருப்ப இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. ஃபாக்சான் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் நிறுவனம் ஆகும். ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தால் தற்போது இவர்கள் சீனாவில் இருந்து வெளியேறுகிறார்கள்.

    இதே வழி முறை

    இதே வழி முறை

    தற்போது சீனாவிலிருந்து ஃபாக்சான் நிறுவனத்தை சென்னை வளைத்து போட்டதை பார்த்து மற்ற மாநிலங்கள் ஆச்சர்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் மற்ற நிறுவனங்களை தங்கள் பக்கம் இழுக்க ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முயன்று வருகிறது. சென்னையை போல ஹைதராபாத், பெங்களூரிலும் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் மீது இவர்கள் குறி வைக்க தொடங்கி உள்ளனர்.

    சீனாவின் மோசம்

    சீனாவின் மோசம்

    சீனா ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து வருகிறது. சீனாவில் இருந்து விரைவில் அமெரிக்க, ஜபபான், ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தால் அது சீனாவிற்கு பெரிய இழப்பாக மாறும். சீனாவின் பொருளாதார அஸ்திவாரமே இதன் உடையும் நிலை ஏற்படும். பொருளாதார ரீதியாக சீனா தனித்து விடப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    India goes for an economical surgical strike against China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X