For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”முறையற்ற அணு ஆயுத சோதனை” – இந்தியா உட்பட 9 நாடுகளின் மீது வழக்கு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அணு ஆயுத சோதனையில் ஈடுபட்ட இந்தியா, அமெரிக்கா உட்பட 9 நாடுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் "மார்ஷல் தீவுகள்" என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பகுதியில் உள்ளது.

இங்கு கடந்த 1946 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு வெடித்து சோதனைகள் நடத்தியுள்ளது.

67 தடவை அணுகுண்டு சோதனை:

67 தடவைகள் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு சுற்றுப்புற சூழலும், மக்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது.

சட்டத்தை மீறிய அமெரிக்கா:

அணு ஆயுதம் குறித்த சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என அமெரிக்கா மீது மார்ஷல் தீவுகள் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.

மேலும் 9 நாடுகள்:

அதே நேரத்தில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா உள்ளிட்ட 9 நாடுகள் மீது நெதர்லாந்து தலைநகர் ஹகூவில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அணு ஆயுத சட்டம்:

அந்த வழக்கின் படி, கடந்த 1968 ஆம் அண்டில் இயற்றப்பட்ட சர்வதேச அணு ஆயுத சட்டத்துக்கு புறம்பாக இந்த 9 நாடுகளும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

English summary
Including America and India there are 9 countries involved in an atomic research breaking of law case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X