For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா தாக்க வாய்ப்புள்ளது? மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. பாக். ராணுவ ஜெனரல் உத்தரவு.. ஷாக்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - சீனா இடையில் லடாக் எல்லையில் பிரச்சனை நிலவி வருகிறது. லடாக்கை மொத்தமாக ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இரண்டு நாட்டுக்கு இடையில் போர் வந்தால் அதில் பாகிஸ்தானின் நிலைப்பாடு முக்கியம் பெறும்.

கண்டிப்பாக பாகிஸ்தான் சீனாவிற்குதான் உதவி செய்யும் என்று கூறுகிறார்கள். சீனா பாகிஸ்தான் இடையே நல்ல உறவும் உள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது.

சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்? சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்?

பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் ராணுவம்

இந்த நிலையில் இந்தியா சீனா இடையே சண்டை வந்தால் இந்தியா பாகிஸ்தானையும் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும். இதனால் பெரிய அளவில் காஷ்மீரில் சண்டை நடக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இப்போதே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

என்ன அச்சம்

என்ன அச்சம்

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியான தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம். சீனா மீதான இந்தியர்களின் கவனத்தை திசை திருப்ப அந்த நாடு பாகிஸ்தானை தாக்க திட்டம் போடுகிறது

சொன்னது என்ன

சொன்னது என்ன

ஆனால் இந்தியா ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் உடனடியாக பதிலடி கொடுக்கும். பாகிஸ்தான் கடுமையான பதிலடியை கொடுக்கும், என்று குரேஷி கூறியுள்ளார். இந்த நிலையில் குரேஷியின் கருத்தை தொடர்ந்து அந்நாட்டு ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இன்னொரு முக்கியமான கருத்தை கூறியுள்ளார். அதன்படி அங்கிருக்கும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தயார் நிலையில்

தயார் நிலையில்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். 50% பெட்களை காலியாக வைக்க வேண்டும். வீரர்கள் காயம் அடைந்து வந்தால் அவர்கள் சிகிச்சை பெற வசதியாக பெட்களை காலியாக வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். போதுமான ரத்தம் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயாராக வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended Video

    India China Border பிரச்சினை..China-வுக்கு India கடுமையான Warning
    திட்டம் என்ன?

    திட்டம் என்ன?

    இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் ;பாகிஸ்தானும் எல்லையில் போருக்கு தயார் ஆகி வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் அத்துமீறி வருகிறது. இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்நாட்டு ராணுவ ஜெனரலின் கருத்து அதிக கவனம் ஈர்த்துள்ளது.

    English summary
    India is planning to attack Pakistan: Prepare 50% beds says Pak Army General to hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X