For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களால்தான் எங்கள் நாட்டில் கொரோனா பரவியது.. இந்தியா மீது பழிபோடும் நேபாளம்.. பின்னணியில் சீனா!

நேபாளத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பிரசாத் சர்மா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாளத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்று அந்நாட்டு பிரதமர் பிரசாத் சர்மா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இந்தியா - சீனா- நேபாள் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லையில் இருக்கும் லிபு லேக் பகுதிதான் இதற்கு காரணம். இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. இதை எதிர்த்து நேபாளம் குரல் கொடுத்தது.

தற்போது அதை தொடர்ந்து நேபாளத்தில் கொரோனா பரவலுக்கும் இந்தியாதான் காரணம் என்று நேபாளம் கூற தொடங்கி உள்ளது. நேபாளத்தில் இன்று மட்டும் 79 கொரோனா கேஸ்கள் பதிவானது. அங்கு மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் பலி.. 114வது நோயாளி பலியானது எப்படி.. அதிர்ச்சி தந்த பிரேத பரிசோதனைதமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் பலி.. 114வது நோயாளி பலியானது எப்படி.. அதிர்ச்சி தந்த பிரேத பரிசோதனை

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

நேபாளம் பிரதமர் பிரசாத் சர்மா இது தொடர்பாக அளித்த பேட்டியில் கொரோனா வைரஸை நேபாளம் சிறப்பாக கையாண்டு இருக்கிறது. தெற்கு ஆசியாவில் நேபாளத்தில்தான் குறைவான பலி எண்ணிக்கை இருக்கிறது. நேபாளத்தில் ஏற்படும் கொரோனா கேஸ்களுக்கு அதிக காரணம் இந்தியாதான். இந்தியாவில் சரியாக கொரோனா சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் நேரடியாக நேபாளம் உள்ளே வருகிறார்கள். இதனால் எங்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

சீனா வைரஸ்

சீனா வைரஸ்

சீனா மற்றும் இத்தாலியில் இருந்து வந்த கொரோனா வைரஸ் வகையை விட தற்போது இந்தியாவில் இருந்து வரும் கொரோனா வைரஸ் மிகவும் வலிமை வாய்த்ததாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய வைரஸ்தான் மோசமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து முறைகேடாக இவர்கள் நேபாளம் உள்ளே வருகிறார்கள். சரியான ஆவணங்கள் இல்லாமல், பலர் இந்தியாவில் இருந்து நேபாளம் வருகிறார்கள்.

மோசமான குற்றச்சாட்டு

மோசமான குற்றச்சாட்டு

இதை தடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, என்று நேபாளம் பிரதமர் பிரசாத் சர்மா குறிப்பிட்டார். இவர் இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார். அதோடு லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா சாலை என்ற பெயரில் ஆக்கிரமித்துள்ளது. இந்த இடங்களை மீட்போம். இந்தியா அங்கு சாலை அமைத்ததை ஏற்க முடியாது, என்று நேபாளம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

பின்னணி யார்

பின்னணி யார்

இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக கருதப்படுகிறது. சீனா இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இந்தியா தங்கள் பக்கம் வளைக்க முயன்று வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற முயன்று வருகிறது. இந்த நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் கொண்டு வர முயல்கிறது. இதனால் இந்தியா மீது சீனா கடும் கோபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India is reason for raise of Coronavirus cases in the country says Nepal PM Oli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X